Tamil's படம்

சிந்து எழுத்தும் தமிழ் நாட்டு பண்டைப் பானைக் கீறல்குறியீடுகளும்

- பேரா. சா. குருமூர்த்தி

சிந்து எழுத்தில் இணைந்தோ அல்லது ஒன்றுக்கு மேற்பட கூட்டாகவோ குறிக்கப் பெற்ற சித்திரக் குறியீடுகள் 'கூட்டுக் குறியீடுகள்' (Ligatured Graffiti) எனப்பெறும். இது அவற்றை தனி அல்லது ஒற்றைச் சித்திரக் குறியீடுகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் வசதிக்காகவே அவ்வாறு குறிக்கப் பெறுகின்றன. இச் சித்திரக்குறியீடுகள் தனிவகைப்பட்டதாக அமைவதோடு ஒரு வா¢வடிவமாக கருதுவதற்கும் சான்றாய் அமைகின்றன. அவற்றின் நீளம் இரண்டு முதல் ஏழு எண்ணிக்கை வரையில் மாறுபடுகின்றன. அவை முந்து அரப்பா, அரப்பா, செம்புக் காலம், இரும்பு முந்து - பிந்து காலம் ஆகிய மட்பாண்டங்களின் மேல் காணப்படுகின்றன. பெரும்பாலான கூட்டுக் கீறல்குறியீடுகளில் குறிச்சின்னங்கள் ஒரு வா¢வடிவம் போலவே கிடைமட்ட நேர்கோட்டில் (Horizontal straightline) எழுதப்பட்டுள்ளன. ஆயினும் அவற்றின் அளவு பல நேர்வுகளில் ஒரே சீராய் இருக்கவில்லை. சில நேர்வுகளில் சின்னக்குறிகள் ஒன்றன் மேல்இடப்பட்டதாய் (superimposed) அமைந்துள்ளதால் அது தனிக் குறிச்சின்னங்களை பி¡¢த்து அடையாளப்படுத்துவதை கடினமாக்குகிறது. சிலநேரங்களில் பலதிறபடும் பிராமி போன்ற குறிகள் மேல்இடப்பட்டோ அல்லது மேற்செலவாகவோ (overlapping) காட்டப்பட்டிருப்பது கிடைமட்டக் கோட்டில் காட்டப்படவேண்டிய குறிகள் பண்டை எழுத்து முறையில் ஒன்றன் மேல்இடப்பட்டதாய் எழுதப் பட்டிருக்க வேண்டும் என்ற கருத்தை மொழிவதாய் உள்ளது. இது கூட்டுக் கீறல்குறியீடுகளின் ஓர் ஒப்பற்ற தனியியல்பாகும். இவ்வாறான மேல்இடப்பட்ட குறிகள் அல்லது எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானைஓடுகளின் நேர்வில் பொதுவாய் அறியப் படவில்லை. இதற்கு பானைஓட்டுக் குறிகள் ஓர் எழுத்தாய் அமைந்திருக்கலாம், அது அரப்பா அல்லது பிராமி எழுத்தாக இருக்கலாம்.

பல நேர்வுகளில் இவ்வாறு மேல்இட்ட குறிச்சின்னங்கள் தன்மையாலும், வடிவத்தாலும் மாறுபட் டிருப்பதை நாம் அறிகின்றோம். இக்குறிகள் பலதிறபட்ட கோணங்களிலும் அதோடு மேலிருந்து கீழாகவும் அல்லது வெறுமனே மேலேயோ அல்லது கீழேயோ அல்லது தொங்கிக் கொண்டோ இருக்கும்படி காட்டப்பட்டுள்ளன. சில நேர்வுகளில் சிறிய அல்லது பொ¢ய
கோடுகள் ஒரு தனிக் குறிச்சின்னத்துடனோ அல்லது அதன் மேலேயோ, நடுவிலோ அல்லது அதன் கீழேயோ சேர்க்கப்பட் டுள்ளன. இவ்வாறு கோடுகளைச் சேர்ப்பது அடிப்படைக் குறிச்சின்னத்தின் உருபனை (Morphology) மாற்றுகின்றது. ஆயினும் இவ்வாறு கோடுகளைச் சேர்ப்பது பொதுவாக பிராமி போன்ற குறியீடுகளிலேயே காணப்படுகின்றன.

இக் குறிச்சின்னங்களை வரைகின்ற போது அதை வரையும் குயவரோ அல்லது எழுத்தாளரோ இடைவெளிவிடுவதில் ஏதொரு ஒழுங்கையும் பின்பற்றியதில்லை. இது அக்குறிகளைக் கீறும் போது அவர் அக்கலனை பல்வேறு கோணங்களில் பிடித்தபடியே அதை மேற்கொண்டிருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது. ஆயினும் பலதிறபட்ட குறிச்சின்னங்கள் ஏன் மேல்இடப் பட்டன (superimposed) என்ற கேள்விக்கு விடை இறுத்த முடியவில்லை.

பல்வேறு இடங்களில் இருந்து திரட்டப்பட்ட கூட்டுக்கீறல் குறியீடுகள் ஏறக்குறைய 763 உள்ளன. பலதிறபட்ட பண்பாட்டின் சூழமைவில் அமைந்த கூட்டுக் கீறல்குறியீடுகளின் அண்ணளவு நீளம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

3 குறிகள் முந்து அரப்பா
7 குறிகள் அரப்பா
5 குறிகள் செம்புக் காலம், காட்டாக - தைமாபாத்து.
6 குறிகள் இரும்புக் கால வாழிடம், காட்டாக - அரிக்கமேடு, அழகரை.
5 குறிகள் இரும்புக் கால ஈமக்குழி, காட்டாக - நாகார்ஜுன கொண்ட

இரு குறியுள்ள கூட்டுக் குறியீடுகள் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் மிகைபட உள்ளன.

முந்து அரப்பா இடங்களது கூட்டுக் குறியீடுகளைப் பொறுத்தவரை பிராமி எழுத்து போன்ற குறிகள் பொதுவாக உள்ளன. மேலும் இக்குறிகளுடன் குறுகிய அல்லது நீண்ட கோடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அரப்பன் இடங்களின் பெரும்பான்மையான சித்திரக்குறியீடுகள் மட்கலன்கள் மீதான அரப்பா எழுத்தை மிகவும் ஒத்துள்ளன. இரு குறிகளை மட்டும் கொண்ட பானைஓடுகள் ஏறக்குறைய 64 உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இச் சித்திரக் குறியீடுகளை வாசிப்பது என்பது முத்திரை எழுத்துகளை வாசிப்பதினும் எளிமையானது. ஆகவே இரு குறிகள் பொறித்த பானைஓடுகளை படிப்பதற்கு உண்மையானதும், நெறிப்பட்டதுமான அணுகுமுறையை மேற்கொள்ளலாம். அவ்வாறு வாசித்த
முறையையே முத்திரைகள் மீதான குறிகளின் வாசிப்பிற்கும் பயன்படுத்தலாம். பானைஓடுகளில் உள்ள சிந்து எழுத்துக் குறிகளுடன் முத்திரையில் எழுத்துடன் இணைந்தே வருகின்ற உருவச்சித்திரங்கள் (Figures) இடம் பெறவில்லை என்பதை உணரலாம். அதன்படியே வாசிப்பும் மேற்கொள்ளப்பட வேண்டும். சிந்துவெளிக் கூட்டுக்குறியீட்டில் பல குறிகள் செம்புக் காலம் மற்றும் தென்இந்திய இரும்புக் காலம் ஆகியவற்றின் கீறல்குறியீடுகளுடன் ஈடும்இணையும்(parallel) கொண்டனவாய் உள்ளன.

செம்புக் கால கூட்டுக் குறியீடுகளைப் பொறுத்தமட்டில் அரப்பாக் கால பானைஓடுகள் பெரும் பாலானவற்றுள் இடம்பெறும் இணைக்குறிகளே இங்கும் அறியப்படுகின்றன. இக்காலத்தில் மூன்று குறிகள் உள்ள பானைஓடுகள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலும், ஐந்து குறிகள் உள்ள பானைஓடுகள் மிகச் சிலவும் உள்ளன. கூட்டுக்குறியீடுகளாய் அமைந்த மிகப்பல குறிகள் முந்து அரப்பா, அரப்பா மற்றும் தென்இந்திய இரும்புக் கால கீறல்குறியீட்டுடன் மிகவும் ஒத்துள்ளன.

தென்இந்திய இரும்புக்கால கூட்டுக்குறியீடுகள் செம்பு மறறும் அரப்பாக் கால இடங்களின் குறியீடுகளை விடவும் எண்ணிக்கையில் விஞ்சி உள்ளன. உண்மையில் இக் கீறல்குறியீடுகள் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட குறிகளால் ஆனவை. அவற்றுள் நான்கு அல்லது ஐந்து குறியீடுகளையும் உடைய கூட்டுக்குறியீகள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளன. இது தொடர்பில் சானூர், கொடுமணல், திருக்காம்புலியூர், அழகரை, உறையூர், கரூர், வல்லம், அ¡¢க்கமேடு, சவனதுர்கம் மற்றும் தி. நரசிபூர் ஆகிய இடங்களை இக் கூட்டுக்குறிகளை தொகை தொகையாய் வழங்கிய மாதி¡¢ இடங்களாகக் குறிப்பிடலாம். கூட்டுக் குறியீடுகளாய் அமைந் துள்ள பெரும்பான்மையான குறிகள் புத்தம் புதியன அல்லாத ஏற்கெனவே முந்து அரப்பா, அரப்பா மற்றும் செம்புக் கால குறியீட்டு வகைஇனம் சார்ந்த அதே வகை தொகையில் அடங்கும். இக் கூட்டுக் குறியீடுகள் உருவாக்கப்பட்ட முறையும், அக்குறிகளின் உருபனும் நம் நாட்டுள்ளேயே ஒரு பொது மூலத்தைக் குறிப்பதாக உள்ளது எனவும் கூறலாம். இதை நாம் ஏன் கூறத் துணிந்தோம் என்றால் அரப்பா நீங்கலாக பிற கூட்டுக் குறியீடுகளாய் அமைந்த குறிகள் சிந்து எழுத்து, பிராமி எழுத்து போன்ற குறிகள் மற்றும் சித்திரக் குறிகளின் பலதிறபட்ட கலவையாகவே தோன்றுகிறது.

சிந்து எழுத்தை ஒத்த தென்இந்திய கூட்டுக் கீறல்குறியீடுகள்:

சிந்துக் குறிகளை மட்டுமே கொண்டு உருவான கூட்டுக்குறியீடுகள் ஏறக்குறைய 84 உள்ளன. இவற்றுள் முப்பத்து இரண்டு பிந்து அரப்பா மற்றும் செம்புக் கால இடங்களில் இருந்து அறியப்பட்டுள்ளன, தென்இந்திய இடங்களில் இருந்து 52 அறியப் பட்டுள்ளன. பெரும்பால் தென் இந்திய கீறல்குறிகள் இரண்டு அல்லது மூன்று குறிகளை மட்டுமே கொண்டனவாகும். இனி இவை சிந்து எழுத்து பொறித்த பானைஓடுகள் என்றே வழங்கப்பட வேண்டும் அ·தல்லாது கூட்டுக் கீறல்குறியீடுகள் என வழங்கமாட்டா. தென்இந்தியாவில் சிந்து எழுத்து பொறித்த பானைஓடுகள் உலகின் பார்வைக்குக் கொண்டுவரப்படுவது இதுவே முதல்முறை (சா. குருமூர்த்தி, தி இந்து - 16.5.93). இந்த பானைஓடுகள் இதுகாறும் வேறு எங்கும் அறியப்படாத சிந்து எழுத்துகளின் பலதிறபட்ட புதுச் சேர்க்கைகளை வழங்குகின்றன. இனி இவை ஏற்கெனவே அரப்பா மற்றும் பிற இடங்களான உலோதல், காளிபங்கன், தைமாபாத் ஆகிய இடங்களிலிருந்து அறியப்பட்ட சிந்து எழுத்துப் பானைஓட்டு தொகுப்புகளுடன் புதிய சேர்க்கையாக சேர்ந்து விட்டன. இதுவரை அறிஞர்கள் சிந்து எழுத்துப் பயன்பாட்டின் தென்கோடி முனையாக தைமாபாத்தையே கருத்தில் கொண்டிருந்தனர். ஆயினும் இப்போதைய ஆய்வுப்படிப்பு அதன் தென் எல்லையை தமிழ் நாட்டின் கீழ்க் காவோ¢ வரை தள்ளி விட்டிருக்கின்றது. இந்தப் பானை ஓடுகளின் கண்டுபிடிப்பு அரப்பா நாகா¢கம் தென் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் தன் கைகளை வி¡¢த்துபரவி இருக்காது ஏனெனில் தமிழ்நாடு அரப்பாவிலிருந்து காலத்தாலும் இடத்தாலும் நெடிய இடைவெளியால் பி¡¢க்கப்பட்டுள்ளது என்ற பல அறிஞரது கண்ணேட்டத்தை பொய்ப் பித்துள்ளது. ஆயினும் ஆசி¡¢யர் (திரு. சா. குருமூர்த்தி) அறிஞர்களின் இல்லாப் பொய்க்கூற்றை தகர்த்ததோடன்றி திரவிட வோ¢யலைப் (பர்ரோ எமனோ, 1984) பயன்படுத்தி அவ் எழுத்துகளை வாசிப்பதற்கும் மெய்யான முயற்சிகளை மேற்கொண்டார். இந்த ஆய்வுப்படிப்பு நெடிய கால இடைவெளியையும் குறுக்கியுள்ளது.

பானைஓடுகள் மீதான சிந்துக் குறிகளின் இப்புதிய கலவை, குறிப்பாக இரண்டும் மூன்றுமாக உள்ள குறிகள் அடையாளங் கண்டு வாசிப்பதற்கு மிக எளியது ஏனெனில் அவை திரவிட நிலத்தில் கண்டெடுக்கபட்டவை, சிறப்பாக தமிழ்நாட்டில். இவ்எழுத்தின் மொழி மூல திரவிடம் (தமிழ்) தவிர்த்து வேறு எதுவும் இருக்கவியலாது. ஆதலால் இந்த எழுத்திற்கு விளக்கம் தர முற்படும் புதிர்வாசிப்பாளர்கள் (Decipherers) மூலதிரவிட மொழியைப் (தமிழை) பயன்படுத்துவதற்கு ஏதொரு தயக்கமும் காட்டவேண்டுயதில்லை. இதுகாறும், குறிப்பாக திரு. எஸ்.ஆர். ராவ் அவர்கள் சிந்துஎழுத்தை மூல திரவிடமாக வாசிப்பதற்கு எதிர்ப்பு மொழிந்து வந்ததன் உண்மைக் காரணம் அதை மூல திரவிடமாக வாசிக்க முயன்ற புதிர்வாசிப்பாளர் சிந்து எழுத்து திரவிட மூலத்தை உடையது (ஈராஸ்,1953, மடலம் I) என்ற உய்த்துணர்வில் அதை மூல திரவிடமாக வாசிக்க முயன்றதனா லேயே ஆகும். இனி ஆசி¡¢யர் (குருமூர்த்தி) திரு. எஸ்.ஆர். ராவின் எதிர்ப்பைப் புறந்தள்ளுவதற்கு ஒரு உறுதியான சான்றை வழங்கியுள்ளார் அதோடு சிந்து எழுத்தின் திரவிட மூலக் கோட்பாட்டிற்கு ஆதரவாகவும், எதிராகவும் வழக்காடி வரும் புதிர் வாசிப்போரால் இனி சிந்து எழுத்து திரவிட மூலமுடையது என்ற கருத்து வரவேற்பைப் பெறும் என்றும் அவர் நம்புகிறார். இதுகாறும் தென்இந்திய கீறல்எழுத்தியல் (graffitology) சிந்து எழுத்தை வாசிக்கும் நாடகத்தில் ஒரு பெரும் பாத்திரமாக இயற்றப்படுவதற்குத் தன் மதிப்புகளை மெய்ப்பிக்கவில்லை. இப்போதைய ஆய்வுப்படிப்பு பண்டு உலகத்துத் தொல் எழுத்துகள் எனும் வளி மண்டலத்தில் சிந்து எழுத்தை நிறுவுவதற்காக அதை வாசிக்கும் செயன்முறையை முன் செலுத்து வதற்கான ஒரு புது வசனத்தைத் தோற்றுவிக்க புதிர்வாசிப்பாளருக்கு ஐயமின்றி உதவும்.

பண்பாட்டு வா¡¢யான பங்கீடும், நிகழ்வு எண்ணும்:

திரட்டப்பட்ட கூட்டுக் கீறல்குறியீடுகளின் மொத்த எண்ணிக்கை 763. இவற்றுள் முந்து அரப்பா மற்றும் அரப்பாக்கால கூட்டுக்குறியீடுகளைத் தவிர்த்தால் நாம் பெறும் மொத்த கூட்டுக்குறியீ டுகளின் எண்ணிக்கை 605. பண்பாட்டு வா¡¢யான பங்கீடும், அவற்றின் சதவிகிதமும் கீழே தரப்பட்டுள்ளன.
____________________________________
வ. எண் பண்பாட்டுக் காலம் கூட்டுக்குறியீடுகள் சதவிகிதம்
________________________________________

1. செம்புக் கால வாழிடம் 80 13%

2. செம்புக் கால ஈமக்குழிகள் 6 1%

3. இரும்புக் கால வாழிடம் 398 66%

4. இரும்புக் கால ஈமக்குழிகள் 121 20%

____________________________
மொத்தம் 605 100% _____________________________

மேலே உள்ள பகுப்பாய்வு கூட்டுக் கீறல்குறியீடுகளின் பெருந் தொகுதி தென்இந்திய இரும்புக் கால அகழ்விடங்களைச் சார்ந்தது என்பதைக் காட்டுகிறது, இதாவது, மொத்தம் 519. கீறல் குறியீட்டு மரபு மெல்ல மெல்லவும், நிலையாகவும் தி¡¢ந்து ஒரு பட எழுத்து அல்லது ஒலி எழுத்து முறையாக உருக்கொண்டது போல் தோன்றுகிறது. செம்புக்காலத்தில் தோற்றம் கொண்ட இச்சூழல் தென்இந்திய இரும்புக் கால பண்பாட்டுத் தளத்தில் முதிர்நிலை எய்தியது. ஆதலால் இவ் வகையான கூட்டுக் குறியீடுகள் பிந்து அரப்பா மற்றும் முந்து சங்க காலத்தில் ஒரு வா¢வடிவின் நோக்கில் பயன்பட்டுள்ளது போல் அல்லது ஒரு வா¢வடிவின் பாத்திரத்தை ஏற்றது போல் தோன்றுகிறது.

செம்புப் காலம் மற்றும் தென்இந்திய இரும்புக் காலம் ஆகியவற்றின் கூட்டுக் கீறல்குறியீடுகளது குறித்தொகுப்பைக் கவனமாய் ஆய்வது இது வரை அறியப்படாத அல்லது குறிக்கப்படாத சுவையான கருத்துகளை அது வெளிப்படுத்துகின்றது.

இக்கூட்டுக் குறியீடுகள் பல்வேறு தொகுப்பிலான குறிகளை அல்லது சின்னங்களைக் கொண்டு கட்டப்பட் டுள்ளன. அவை (1) சிந்துக் குறிகள் மட்டும் (2) சிந்துக்குறிகளுடன் கீறல்குறிகள் (3) சிந்துக் குறியுடன் பிராமியும், கீறல்குறியீடும் (4) பிராமியுடன் கீறல்குறியீடுகள் மற்றும் (5) தூய கீறல்குறிகள் அல்லது படஎழுத்துகள் என்னும் வகையின.

1. செம்புக் காலத்தில் இக்கூட்டுக் குறியீடுகளை கட்டிஎழுப்ப பிந்து அரப்பாக் குறிகள் அல்லது சீர்கெட்ட அரப்பாக் குறிகள் எடுத்தாளப்பட்டன. இக்கூட்டுக்குறிகள் உலோதல் மற்றும் காளிபங்கன் ஆகிய இடங்களிலிருந்து அறியப்பட்ட சிந்துப் பொறிப்பெழுத்தை கொண்ட பானை ஒட்டுக் கீறல்குறியீடுகள் போன்றது அன்று. இவை முத்திரை மீதுள்ள சிந்துக் குறிகளொடு உள்ளடக்கப்படவில்லை அல்லது அகழாய்வாளர்களாலேயே முத்திரைச் சிந்துக்குறிகளின் பகுதியாகவும் வைக்கப்படவில்லை. இவை எவர் கையும் படாமல் விட்டுப் போயின. ஆயினும் இப்போதைய ஆய்வுப்படிப்பு இக்கீறல் குறியீடுகள் பிந்து அரப்பா எழுத்தின் அமைப்பாகக் கருதப்பட வேண்டியதை வெளிப்படுத்துகின்றது. திரு எஸ்.ஆர். ராவ் கூட சிந்துக் குறிகளை ஒத்துள்ள ஒற்றைக் கீறல்குறியீட்டின் மீது மிகுந்த கவனம் செலுத்தினாரன்றி இக் கூட்டுக் கீறல் குறியீடுகளை ஒரு பொருட்டாகவே கொண்டா¡¢ல்லை. ஆதலால் இக் கீறல்குறியீட்டுத் தொகுப்பு ஏற்கெனவே உள்ள சிந்துக்குறி எழுத்துகளுடன் சேர்க்கப்படவில்லை.

2. கூட்டுக்குறியீடுகளும், முந்து பிந்து பிராமி எழுத்தும்:

கீறல்குறியீடுகளைத் தவிர சிந்துக்குறிகளும் பிராமி போன்ற குறிகளும் கலந்த கூட்டுக்குறியீடுகள் மிகப்
பலவாக இல்லை. ஆயினும் இக் காலத்துக் கீறல்குறியீட்டில் பிராமி போன்ற குறிகள் தோன்றுவது ஒரு புதிய வா¢வடிவம், இதாவது, முந்து மற்றும் மூல பிராமி எழுத்து உருவாகி வரும் போக்கை மொழிவதாய் உள்ளது ஆயினும் புள்ளி விவரம் காட்டியபடி இது ஒரு வடிவத்தை இன்னமும் கொள்ளவில்லை.

3. தூய கீறல்குறியீடுகளை உடைய கூட்டுக் குறியீடுகள் மொத்தமுள்ள 86 குறியீடுகளில் ஏறக்குறைய 46 உள்ளபடியால் அக்களத்தில் அதுவே கோலோச்சுகின்றது.

4. வாழ்விடக் கூட்டுக்குறியீடுகள் ஈமக்குழிகளினதும் விட எண்ணிக்கையில் விஞ்சியுள்ளன. மீண்டும் இது நம்முடைய முடிபான கீறல்குறியீடுகள் வெறும் சித்திரக்குறிகள் என்பதற்கும் மேலானவை என்பதை உறுதிப்படுத்துகின்றது. அவை ஒரு வா¢வடிவாகவே பயன்பட்டுள்ளன.

5. கூட்டுக் குறியீட்டில் மேல்இட்ட சின்னக்குறிகள் அல்லது குறியீடுகள் சிந்து எழுத்தின் சா¢வை அல்லது பிளவு வினைமுறையை மொழிகின்றன. அதே வேளை சிந்து எழுத்தின் அடிப்படையில் அல்லது சிந்துக் குறிகளும், பிராமி போன்ற குறிகளும், கீறல்குறிகளும் அடங்கிய கலவையால் ஒரு புது வா¢வடிவத்தை வடித்தெடுக்கும் அல்லது வார்த்தெடுக்கும் வாயிற்படியில் முந்து இரும்புக் கால மக்கள் இருந்துள்ளனர் என்பதையும் அவை காட்டுகின்றன.

தென்இந்திய இரும்புக் காலம்:

இங்கு மீண்டும் அதே போக்கு திரும்பவும் நேர்வதை நாம் அறிகின்றோம் ஆயினும் அது இன்னும் வீரார்ப்புடன் நேர்கின்றது, இதாவது, வாழ்விடங்களின் கூட்டுக்குறியீடுகள் எண்ணிக்கையில் ஈமக்குழிகளினதும் விட விஞ்சியுள்ளன என்பதே.

1. தமிழ்நாட்டு கூட்டுக் குறியீடுகளில் வழங்கும் சிந்துக்குறிகள் பிற்பட்ட அரப்பா அல்லது முதிர் அரப்பாக் குறிகள் போல் தோன்றுகின்றன. இக் கீறல்குறியீடுகள் கிட்டிய இடங்கள் தமிழ் நாட்டு இரும்புக் கால மக்கள் அரப்பர்களின் வழிதோன்றல் களே என்ற நம் கொள்கையை இப்போது உறுதிப்படுத்தியுள்ளன.

2. மீண்டும் பிராமி போன்ற குறிகளும், கீறல்குறிகளும் கலந்த கூட்டுக்குறியீடுகள் இக்காலத்தே எண்ணிக்கையில் அதிகப்படுகின்றன. அவை சிந்து எழுத்து, மெல்ல மெல்ல ஒரு புது வா¢வடிவமாக உருவாவதற்கு வழிகோளுவதைக் காட்டுகின்றன, இதாவது, முன்னமே கூறினார் போல் முந்து மற்றும் மூல பிராமி எழுத்திற்கு வழிகோளின என்பதே.

3. செம்புக் காலத்தைப் போல இக்காலத்தேயும் தூய கீறல் குறியீடுகளைக் கொண்ட கூட்டுக் குறியீடுகள் பெருந்தொகை யாக அமைந்துள்ளன; இது மீண்டும் இக் கீறல்குறியானது மூல பிராமி எழுத்தின் உருவாக்கத்திற்கு முன்னதாக ஒரு வா¢வடிவாகவோ அல்லது படஎழுத்தாகவோ அல்லது கருத்தெழுத்தாகவோ அல்லது ஒலிஎழுத்தாகவோ அல்லது இம் மூன்றன் கலப்பாகவோ பயன்பாட்டில் இருந்திருக்க வேண்டும் என்பதை மொழிவதாக உள்ளது. இக்கூற்று இன்னும் மிகுதெளிவாக இல்லை; அத்துடன் கூட்டுக்குறியீடு குறித்த இப்பார்வை உன்னிப்பான ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும். இருப்பினும் ஆசி¡¢யர் (குருமூர்த்தியார்) மேற்சொல்லினவற்றில் எல்லாக் கால வகைகளிலிருந்தும் ஒரு சிலவற்றை வாசிப்பதற்கு முறையான திரவிட வோ¢யலின் துணையோடு முயன்றார்.

எழுதும் திசை:

சிந்து எழுத்து பொறித்த பானைஓடுகளில் சிந்து எழுத்து அடங்கிய கூட்டுக் குறியீடுகளும் தூய கீறல் குறிகளும் வலமிருந்து இடதிசையாக படிக்கப்பட்டன. ஆயினும் பிற குறிகளின் கலப்புடன் உள்ள கூட்டுக் குறியீடுகள் வலமிருந்து இடமாகவோ அல்லது அதற்கு நேர்மாறாகவோ பொருள் பொதிந்த உணர்த்தலுக்குத் தக்கவாறு படிக்கப்பட்டன. மேற்செலவாக (overlap) தெளிய வரையப்பட்ட குறிகள் உள்ள பானைஓடுகள் மிகச் சிலவே இருக்கின்றன. இந்த மேற்செலவான காரணி கூட்டுக் குறியீடுகளின் எழுதும் திசையை வலமிருந்து இடமாக நிறுவுதற்கு சில துப்புகளைத் தருகின்றது. காட்டாக, அடையாள மாகக் கொள்ளப்பட்ட ஒரு குறியீட்டில் இடப்பக்கக் குறி வலக் குறிக்கு மேற்செலவாகின்றது. இது மற்றொரு அடையாளக் குறியீட்டிலும் (specimen sign) தெளிவாகப் புலப்படுகின்றது.

மதிப்பீடுகள்:

ஒவ்வொரு குறியீட்டிற்கும் மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிராமி போன்ற குறிகளுக்கு பக்கத்தில் உள்ள பிராமி எழுத்துகளின் மதிப்பே அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிராமி எழுத்திற்கு இடம் அளிக்கின்ற மூல பிராமி எழுத்துகளை அக் கூட்டுக் குறியீடுகள் கொண்டிருப்பதாகக் கருதியே எனலாம். கீறல் குறியீட்டின் எழுத்துத் திசையை, மதிப்பை, பொருள் விளக்கத்தை அடையாளப்படுத்த பணி முழுதும் ஒரே சீரான முறையே ஏற்கபட்டுள்ளது.

குறிப்பாக அறியப்பட்ட சில கூட்டுக் குறியீடுகளை வாசிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு அவற்றுக்கான மதிப்பும், பெறப்பட்ட பொருளும் அட்டியலிடப்பட்டுள்ளன (படம் 122, நூல் 'Deciphering the Indus script' சென்னைப் பல்கலைக் கழகத்தால் 1999இல் வெளியிடப்பட்டது)

தமிழ்நாட்டு கூட்டுக் குறியீடுகளின் மொழியும், அவற்றின் ஆக்குனர்களும்:

முன்சென்ற பக்கங்களில் கீறல் குறியீடுகளின் அடையாளப்படுத்தம் அல்லது வாசிப்பு முற்று முழுதாக கீறல் குறியீடுகளி டையே வழங்கும் படஎழுத்துகள் அல்லது குறியெழுத்துகள் கடந்த கால திரவிட மொழியை அல்லது இந்திய திரவிட மொழியை நிகர்க்கின்றன என்ற கருத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டன. இக்குறியீடுகளை வாசிப்பதற்காகத் தொ¢யப்பட்ட தமிழ்ச் சொற்கள் மூல திரவிடத்தின் தொடக்கமாக இருக்கவேண்டும் என்ற கடடாயமில்லை ஆனால் சங்க காலத்தினதும், முந்து சங்க காலத்தினதுமான ஒரு கலப்பு திரவிட மொழியாக இருக்கலாம். இது ஏனென்றால் சில குறிச்சின்னங்கள் சங்க காலத்தே வழங்கிய தமிழ்ச் சொற்களின் உதவியால் வாசிக்கப்பட்டுள்ளன என்ற உண்மையினால் ஆகும். அவற்றை வாசிப்பதற்கு இடைக்காலத் தமிழ்ச் சொற்களும் எண்களும் கூட தொ¢யப்பட்டுள்ளன.

இவ் வாசிப்பின் பக்கம் துலாக்கோலைச் சாதகமாய்ச் சாய்த்த காரணிகள் பின் வருமாறு:

1. மொத்தமுள்ள 3,056 கீறல்குறியீடுகளில் 60%க்கு மேலதாக, இதாவது 2,195 தென்இந்திய இரும்புக் கால ஈமக்குழிகள் மற்றும் வாழ்விடங்களிலிருந்து அறியப்பட்டுள்ளன, இதாவது, திரவிட நிலத்திலிருந்து. இந்த 60% உள்ளும் 1,613 தமிழ்நாட்டிலிருந்து அறியப்பட்டுள்ளன.

2. கீறல் குறியீடுகளில் ஏறக்குறைய 20% பெருமானம் கொண்டதாய் அறியப்படுகின்ற, இதாவது 548 செம்புக் கால கீறல்குறியீடுகளும் நருமதை ஆற்றுக்குத் தெற்காகவும், தென்மேற்காகவும் அமைந்த பகுதிகளான மகாராட்டிரம், குஜராத்து மற்றும் ராஜஸ்தான் ஆகிய பகுதிகளிலிருந்தே பெரும்பாலும் அறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளையும் பண்டைக் காலத்து தென்இந்தியா அல்லது திரவிட தேசத்துடன் நாம் உள்ளடக்குவோமானால் நாம் தவறு இழைத்த வராக ஆகமாட்டோம். இக்கருத்து இவ்விரு பகுதிகளின் கருப்பு சிவப்பு மட்பாண்ட மரபிற்கும், கீறல்குறியீட்டிற்கும் உள்ள ஒத்த பொதுத்தன்மையால் மேலும் வலுப்பட்டு ள்ளது. முந்து அரப்பாவின் அன்ஆ¡¢யக் கீறல்குறியீட்டிற்கும், தென்இந்திய கீறல்குறியீட்டிற்கும் உள்ள ஒத்த தன்மை இந்த விவாதத்திற்கு கூடுதல் சான்றைத் தருகினறது.

3. மாறுபட்ட சிந்துக் குறியீடுகளை விலக்காத நிலையில் பெரும்பான்மையாக 120 குறியீடுகள் தென்இந்திய குறியீடுகளுடன் ஈடும்இணையும் (parallels) உள்ளனவாக இருப்பது இவ் இரு பகுதிகளின் பண்பாடுகளையும் அவை தொலைவாலும் காலத்தாலும் பெருத்த இடைவெளியால் பி¡¢க்கப்பட்டிருந்தன என்ற உண்மையையும் கடந்து அண்டியநெருக்கத்திற்குக் கொண்டு வருகின்றது. இவ் இடைவெளியை ஏற்கெனவே குறிப்பிட்டது போல கருதத்தக்க அளவிற்கு குறுக்கிடவியலும். இவ்விரு காலத்தாரும் (இக்காலத்தார்க்கு) சமகாலத்தவராய் இல்லாவிடினும் திரவிடர்கள் (தமிழர்கள்) அரப்பர்களின் நினைவாக இக் கீறல் குறியீடுகளைத் தமதாக ஏற்றிருப் பார்கள். மற்றொரு வகையில் இவ்வாறாக இதைச் சொல்லலாம். சிந்து எழுத்துக் குறிகள் திரவிடர்தம் மட்பாண்டங்கள் மீதும் பிரதிபலிக்கின்றன, இதாவது, அரப்பா நாகா¢கத்தின் மிகப் பரவசமூட்டுவதும் நுண்ணறிவார்ந்ததுமான பார்வை தென்இந்திய கீறல்எழுத்து மரபில் காணத்தக்கதாய் உள்ளன. காட்டக, சிந்துஎழுத்துக்கு பொதுவாக உள்ள மீன் குறி பெருங்கற்கால கீறல்குறியிலும் மிகப்பெரும் நிகழ்வாக உள்ளது. இவை 58 தவணைகள் நேர்கின்றன. கயல் தமிழில் மீன் எனப்படும், அதோடு சிந்து நிலப்பரப்பு ஒருபோது மீன்கள் நிரம்பிய நாடு எனும் பொருளில் "மீன்நாடு" எனப்பட்டது (ஈராஸ்,1953).

மகாபாரத ஆசி¡¢யர் வியாசர் ஒரு மீனவர் மைந்தன் என்று நம்பப்படுகிறது. சங்க இலக்கியத்துள் ஒன்றான புறநானூறு பாரதப் போ¡¢ல் பாண்டவர் படைக்கும், கௌரவர் படைக்கும் சோறிட்ட சேர மன்னன் உதியன் சேரலாதனைப் பற்றி குறிப்பிடுகின்றது. இது சேரமன்னன் ஏதோ வகையில் பாரதப் போர் நிகழ்வில் தொடர்பு கொண்டுள்ளதைக் குறிப்பிடுகின்றது. இது மகாபாரத ஆசி¡¢யர் வியாசர் திரவிட மூலம் கொண்டவர் என்ற பார்வையை வலுப்படுத்துவதோடு சிந்துப் பரப்பை மீன்நாடு எனப் பெயா¢ட்டதை ஞாயபபடுத்துவதற்கு மேலும் ஒரு சான்றாகும்.

பாதர் ஈராஸ் அவர்கள் ஒருபோது மொகன்சதரோ நாகா¢கம் சிந்துவெளிக்குள் மட்டுப்பட்ட நாகா¢கமன்று அது இந்தியா முழுதும் வி¡¢ந்திருந்த ஒரு நாகா¢கமாய் இருந்தது என்றும் ஈறாக நாம் மொகன்சதரோவை ஒத்த நாகா¢கத்தின் எச்சங்களை இந்தியத் துணைக்கண்டம் நெடுகிலும் கண்டு எடுக்கவேண்டும் எனவும் உணர்ந்தார். சிந்துவெளி நாகா¢கத்தின் எச்சங்கள் சிந்துப் படுகையின் எல்லைகளுக்குப் பின்புலமான தமிழ்நாட்டையும் தொட்டு ஈழம் வரை நீள்வது அறியப்படுவதால் ஈராஸின் கணிப்பு மெய்ப்பட்டுள்ளது.

திரு. ஹால் ஒரு அடி முன்னே சென்று இந்தியாவின் பண்பாடு மூலத்தில் முந்துஆரியத் தன்மை கொண்டது என்றதோடு அமையாது கிரேக்கத்திற் போல் தோற்கடிக்கப்பட்டோர் தோற்கடித்தோரை நாகா¢கப்படுத்தினர் என்றார்.

இக் கருதுகோளுக்கான ஆவணம் தென்இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இரும்புக் கால இடங்கள் பலவற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட தூய சிந்து எழுத்தகளை பொறித்த பானை ஓடுகள் ஏந்தி உள்ளன. எழுத்து பொறித்த பானைஓடுகள் தென்இந்திய திரவிடர்கள் அரப்பர் களின் வழிதோன்றல்கள் என்றும் அவ் அரப்பர்களின் மொழி தென்இந்திய மொழிகள் யாவற்றிலும் தொன்மை மிக்க தமிழாகவே இருத்தல் வேண்டும் என புகல்வதற்கு ஒரு அடி மேலே செல்ல நம்மை வழிநடத்துகின்றது.

நீண்ட காலத்திற்கு முன் ஈராஸ¤ம், அண்மையில் அஸ்கோ பர்போலா, மகாதேவன் மற்றும் பிறர் மூல திரவிட வோ¢யலின் துணையோடு சிந்து எழுத்துகளை வாசிப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டனர். இவ்அறிஞர்களின் இடைநில்லாததும், நோவுஎடுப்பதுமான ஆராய்சச்¢களும் அரப்பர்களை திரவிடர்களாக அடையாளப்படுத்துவதற்கான அவர்தம் நம்பகப்படுத்தும் காரண கரும விளக்கங்கள் ஆசி¡¢யரை அக்காரண கருமம் எனும் ஆழியில் ஒரு முழுக்கு போடுவதற்கு உசுப்பி அதிவீச்சுள்ள ஊக்கத்தோடும் குறிப்பிடும்படியான நம்பிக்கையோடும் பிற்பட்ட அரப்பா காலத்துத் தமிழர்கள் அரப்பர் எழுத்தின் பயனை அறிந்திருத்தனர் என்பதோடு ஏற்கெனவே கருத்துரைத்தது போல அதை தம் மட்பாண்டத்தின் மீது பயன்படுத்த் தலைப் பட்டனர் என்றும் புகலத் துணிந்துள்ளார்.

ஆதலால் தமிழ்நாட்டிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட சிந்துக்குறிகள் கொண்ட பானைஓடுகள் ஐயத்திற்கு இடமின்றி அரப்பர்களின் அல்லது பிற்பட்ட அரப்பர்களின் பண்பாட்டுக் கூறுகள் முந்து சங்க கால தமிழ்ச் சமூகத்தில் பின்னிப்பிணைந் துள்ளதை சுட்டுகின்றன.

தமிழ்நாட்டு இரும்புக் கால கீறல்குறியீடுகளின் விவரம் காட்டும் அறிக்கை

எண்

இடம்

மாவட்டம்

ஒற்றைக்குறியீடு

கூட்டுக்குறியீடு

மொத்தம்

1

அமிர்தமங்கலம்

திருவள்ளூர்

4

-

4

2

குன்னத்தூர்

காஞ்சிபுரம்

1

1

2

3

பெரும்பெய்ர்

திருவள்ளூர்

1

1

2

4

சானூர்

காஞ்சிபுரம்

11

28

39

5

வட ஆற்காடு

வட ஆற்காடு

3

1

4

6

கோவலன்பொற்றல்

மதுரை

3

2

5

7

கம்பர்மேடு

தஞ்சாவூர்

3

2

5

8

ஆதிச்ச
நல்லூர்

தூத்துக்குடி

2

2

9

வீராம்பட்டினம்

புதுச்சோ¢

2

2

10

பிரோகி

கோழிக்கோடு

2

2

11

பொற்களம்

திருச்சூர்

2

2


இரும்புக்
கால வாழ்விடம்

12

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

13

2

15

13

குடிக்காடு

தென்ஆற்காடு

3

3

14

அதியமான்
கோட்டை

தருமபு¡¢

1

1

15

குட்டூர்

தருமபு¡¢

3

3

16

பேரூர்

கோயம்புத்தூர்

37

13

50

17

அழகரை

திருச்சி

87

47

134

18

கரூர்

கரூர்

74

36

110

19

திருக்காம்புலியூர்

திருச்சி

164

70

234

20

உறையூர்

திருச்சி

82

31

113

21

கொற்கை

தூத்துக்குடி

7

17

24

22

ஆலங்குளம்

இராமநாதபுரம்

26

26

23

அ¡¢க்கமேடு

புதுச்சோ¢

89

25

114


ஈமக்குழியும்
வாழிடமும் அண்டி அமைந்த
இடங்கள்

24

கொடுமணல்

பொ¢யார்

275

70

345

25

வல்லம்

தஞ்சாவூர்

89

19

108


அருங்காட்சியகங்கள்

26

அரசு
அருங்காட்சியகம்

சென்னை

20

4

24

27

அரசு
அருங்காட்சியகம்

மதுரை

4

4

8

28

அரசு
அருங்காட்சியகம்

சேலம்

1

1

29

அரசு
அருங்காட்சியகம்

புதுச்சோ¢

21

3

24

30

அருங்காட்சியகம்

கோயம்புத்தூர்

3

1

4

31

அருங்காட்சியகம்

பூண்டி்

2

2

32

அருங்காட்சியகம்

ஈரோடு

2

2

33

அருங்காட்சியகம்

தருமபுரி

2

2

34

அருங்காட்சியகம்

கொற்கை

8

8

35

கலைமகள்
அருங்காட்சியகம்

ஈரோடு

ஆசிரியர் குறித்து:

பேரா. திரு. சா. குருமூர்த்தி 1938 இல் மயிலாடுதுறையில் பிறந்தவர். சென்னைப் பல்கலைக் கழகத்தில் இலக்கியத்தில் நிறைஞர் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். சென்னைப் பல்கலைக் கழக பண்டை வரலாறு மற்றும் தொல்லியல் துறைத் தலைவராகவும், வரலாற்று ஆய்வுப்படிப்புகள் பள்ளியின் இயக்குநராகவும் இருந்து 1999 இல் பணிஓய்வு பெற்றார். இவர் இப்போது தமிழ்ப் பண்பாட்டு வரலாறு மற்றும் சிந்து எழுத்து புதிர்வாசிப்பு ஆகிய ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளார்.

மொழியாக்கம் : சேசாத்திரி
SESHADRI S

6.5
Your rating: None Average: 6.5 (2 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

நன்றி


6

நன்றி Clap


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil