joshi2010's படம்

கைத்தொலைபேசியை தொடர்ந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் கதிர்களால் நம் மூளை பாதிக்கப்படும் எனவும், அதெல்லாம் இல்லை எனவும் எதிர்மறையான விவாதங்களும் அது குறித்த ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

இருப்பினும் கைத்தொலைபேசி இயங்கும் போது கதிர்வீச்சு இருப்பது என்னவோ உண்மை தான். எனவே அது பாதிப்பினை ஏற்படுத்துகிறதா என்ற விவாதத்திற்குள்ளே போகாமல் சற்று பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம்.

இயலுமானால் உங்கள் உடம்பிலிருந்து கைத்தொலைபேசியை சற்று தூரத்திலேயே வைத்துப் பயன்படுத்தவும். இதனால் கதிர்வீச்சு உங்கள் உடம்பை அடைவது குறையும். இதற்கு ஹேண்ட்ஸ் பிரீ செட்கள் கிடைக்கின்றன.

கைத்தொலைபேசியை அதிகம் மூடி வைக்க வேண்டாம். இதனால் சிக்னல்கள் வந்தடைவது சற்று தடுக்கப்படும். சிக்னல்களை எப்படியும் அடைய வேண்டும் என்ற முயற்சியில் கதிர்வீச்சு அதிகமாகும்.

பேசும் போது கைகளால் அதிகம் மூடுவதும் இதே விளைவினை ஏற்படுத்தும். கைத்தொலைபேசியில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து கைத்தொலைபேசியிலும் இருக்கும்.

இது குறைவாக இருக்கும் போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும்.

கைத்தொலைபேசியில் குறைவான காலம் பேசவும். அதிகம் பேச வேண்டும் என்றால் தரைவழி இணைப்பைப் பயன்படுத்தவும். கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுகையில், ஏன் சைக்கிள் ஓட்டுகையிலும் கைத்தொலைபேசியை பயன்படுத்தவே கூடாது. நம் கவனம் நிச்சயமாய் திசை திருப்பப்பட்டு விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது.

கட்டாயம் பேச வேண்டும் என்றால் வாகனத்தினை ஓரமாக நிறுத்திப் பேசவும். அதிகமாக எலக்ட்ரிக்கல் அல்லது டிஜிட்டல் சாதனங்கள் இயங்கும் இடங்களில் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். உங்களுக்கு சிக்னல் கிடைப்பது சிக்கலாவதுடன் அந்த சாதனங்கள் இயக்கமும் தடைபடலாம்.

மருத்துவமனைகளில் இத்தகைய சாதனங்கள் உள்ள இடங்களில் பயன்படுத்துவதை அறவே தவிர்க்கவும். அந்த சாதனங்கள் சரியாகச் செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.

விமானத்தின் உள்ளேயும் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு வந்தால் மட்டுமே பயன்படுத்தவும். மற்ற நேரங்களில் அணைத்து வைப்பது நல்லது.

சிறுவர்கள் அதிக நேரம் பயன்படுத்துவதனை அனுமதிக்காதீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் பயன்படுத்துவதனை அறவே தவிர்க்க வேண்டும் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. வயிற்றில் வளரும் குழந்தையை கதிர்வீச்சு பாதிக்கும் என்பதாலேயே இந்த ஆலோசனை.

5.33333
Your rating: None Average: 5.3 (3 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

சிறந்த வழிகாட்டல்


10

சிறந்த வழிகாட்டல்


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


joshi2010's படம்

தங்கள் கருத்திற்கு மிக்க


1

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.... நண்பரே


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


saravanamuthu's படம்

நல்ல பதிவு!!


5

நல்ல பதிவு!!