வாழ்க தமிழ்! வளர்க எம் தமிழ் மக்கள்! அம்மா புகழ் ஓங்குக!
இந்திய தேசத்தின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்த செயலும் கண்டனத்திற்கு உரியது!
புரட்சித் தலைவர்விட்டு சென்ற பணிகளை செவ்வனே செய்து கொண்டு தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு கடமையுணர்வுடனும் நேர்மையுடனும் பணியாற்றும் ஒரு முதல்வரை கேரள அரசு அவமனப்படுத்தியுள்ளது கண்டிக்கதக்கது,
ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகிய எமது அன்னை புரட்சித் தலைவியின் உருவபொம்மையை கேரள அறிவீலிகள் கொளுத்தியுள்ளமைக்கு இந்தியத் தமிழர்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.கழகத்தின் சார்பாக எனது கண்டனத்தை மத்திய அரசிற்கும் கேரளத்தின் ஆளும் உம்மன்சான்டியின் காங்கிரஸ் ஆட்சிக்கும் வன்மையான எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்,
தமிழர்களாகிய நாங்கள் முறைப்படி முல்லைப்பெரியாற்றின் பிரச்சனைக்கு தீர்வு காண முற்படும் வேளையில் எமது மாநிலத்தின் முதல்வர் அன்னை புரட்சித்தலைவியின் உருவபொம்மையை கேரளத்தில் வண்டிப்பெரியாற்றில் இன்னும் சில இடங்களில் அன்னையின் உருவபொம்மையை தேசத்தின் ஒற்றுமையை சிதைக்கும் விதத்தில் கொளுத்தியுள்ளமை கேரள மக்களின் அநாகரீகத்தையும், அம்மாநில அரசின் தான்தோன்றித்தனத்தையும் இவற்றின் மூலம் எமது அன்னையை அரசியலில் எதிர்க்க துணிசலில்லாத காங்கிரஸ் மத்திய அரசின் காழ்ப்புணர்ச்சியின் எண்ணமாகவே இதை எமது மாநில மக்கள் உணர்கின்றனர்.
எம் மாநில முதலமைச்சரின் உருவ பொம்மையை கொளுத்தியவர்களின் மீது மத்திய மாநில அரசுகள் குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்தி வழக்கு விசாரணைத் தொடங்கவேண்டும். நீதி மன்றத்தில் வழக்கு இருக்கும் தருவாயில் கேரளமக்கள் இது மாதிரி செய்வது நீதி மன்றத்தையும் எமது நாட்டு இறையன்மையையும் அவமானப்படுத்தியுள்ளார்கள்,
இதற்கு உடந்தையாக இருந்த ஆளும் கேரள அரசின் மீதும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் நீதி மன்றத்திடமும்,எம்மாநில முதலமைச்சராகிய புரட்சிதலைவி அம்மவிடமும் கேரள அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்,
உரிமையுடன்: முத்துஜி
- muthukumarG's blog
- Login or register to post comments
- 320 reads
கருத்துகள்
தங்கள் உணர்வு
தங்கள் உணர்வு வெளிப்பாடு
உண்மையை உரைக்கிறது
தொடர்ந்தும்
தங்கள் படைப்புகளை
தமிழ் நண்பர்கள் தளத்தில் இடவும்
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
கண்டனம் இருக்கட்டும்.
கண்டனம் இருக்கட்டும்.
தங்களிடம் ஒரு கேள்வி.
கூடங்குளம் எதிர்ப்பு போராட்ட காரர்கள் மன்மோகன்சிங்கின் உருவ பொம்மையை எரித்தால் நீங்கள் ஆதரவளிப்பீர்களா? மாட்டீர்களா?
நாம் கேரள மக்களின் உயிர்களுடன் தான் விளையாடிக்கொண்டிருக்கிறோம். முல்லைபெரியாறு அணை மழையில் ஏற்கெனவே நிரம்பி மறுகாலிட்டுவிட்டது. அதற்கு ஏதேனும் பங்கம் நிகழ்ந்தால் நீங்களோ நானோ பொறுப்பு ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழக முதலமைச்சர் தான் பொறுப்பு.
அவர்கள் உயிருக்காக போராடுகிறார்கள். போராடும் எல்லோரும் அமைதியாக இருப்பார்கள் என்று எண்ண முடியாது.. உருவப்பொம்மையை எரிக்காமல் இருக்க வேண்டும் என்றால் நாம் அறிவுடனும் மனிதாபிமானத்துடனும் நடந்துகொள்ள வேண்டும்.
இங்கே படியுங்கள் http://tamilnanbargal.com/node/37015
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
நண்பர்களே.. நாம்
நண்பர்களே..
நாம் நினைப்பதுதான் தவறு. இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் எதுவும் அடித்தட்டு மக்களின் உயர்வுக்கு ஒருபோதும் செயல்பட வில்லை என்பதுதான் எனது கருத்து.இந்திய அரசியல்வாதிகள் ஏறத்தாழ 90 விழுக்காடுக்கும் மேல் சுயநலவாதியாக இருக்கிறார்களே யாரும் மக்களை பற்றி சற்றேனும் அவர்களின் உயர்வைப்ற்றி கவலைக்கொண்டதாக இல்லை. அப்படி இருந்தால் சேது சமுத்திர கால்வாய் பணி நிறைவேறிருக்கும். ஆனால் இந்த அரசுகள் குடுமிசண்டை போடவே தங்களது நேரத்தை செலவிடுகிண்றனர். கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்பட்டால் தமிழக மின் பற்றக்குறையை நிவர்த்தி செய்யமுடியும். ஆனால் இந்த அரசுகள் மெத்தனத்தினால் அவை செயல்படாமல் இருக்கின்றன. பேரிடர் இழப்பு என்பது நாம் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் எச்சரிக்கையாக இருந்தால் இழப்பை குறைக்கமுடியும்.
இன்றைய சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் சட்டசபையை, மான்றத்தை ஏதோ சண்டைபோடுமிடமாகத்தான் நினைக்கிறார்கள் தவிற மக்களுடைய பிரச்சனையை சரிசெய்யவேண்டும் என்ற எண்ணாமில்லை என்பது உண்மையே. காங்கிரஸாகட்டும் ப.ஜ.க வாகட்டும் இவர்கள் ஒரு சில சமுதாயத்திற்காகதான் செயல்படுகின்றன.இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பஜ்ஜாப், குஜராத் போன்ற மாநிலங்களைத் தவிற மற்ற மாநிலங்களில் மக்கள் இன்னும் பெறும்பாலும் அடிமையாக, கல்வியற்றவர்களாக, பண்பாடு இல்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். சுதந்திரம் அடைந்த பின் மக்கள் இன்னும் வடமாநிலங்களில் ஒடுக்கப்படுகிறார்கள். இந்தியாவில் வட மாநிலங்களில் தென் மாநிலங்களை விட சாதி கொடுமை அதிகமாக இருக்கின்றன. இந்தியாவின் சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் உறவினர்கள் மீது கூட சில ஆண்டுகளுக்கு முன்னர் சாதி கொடுமை செய்யப்பட்டது. இது இந்த அரசுகள் மக்களுக்கு நன்மையை எப்படி செய்யும் என்பது தெரியவில்லையா? அதனால் தான் கூறுகிறேன் இந்த அரசுகள் அடித்தட்டு மக்களின் உயர்வுக்கு ஒருபோதும் செயல்பட வில்லை என்பதுதான் எனது கருத்து. எனது கருத்துக்கள் தவறு எனில் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன் நான் செல்வகுமார் தமிழ்மீதும்,தமிழர்கள் மீதும் ஆழ்ந்த நட்பும் அன்பும் கொண்டவன்.உங்களுடன் உறவாடுவதில் மகிழ்ச்சியுடையவன்










