seshadri's படம்

கீழை நாகாரீகங்களில் தமிழர் சுவடுகள்

உலக நாகாரீகங்கள் பலவும் சற்றொப்ப 9,000 ஆண்டுகள் அளவில் தோன்றியவை. எதியோபியா, எகிப்து, சுமோரீயா ஆகிய மேற்றிசை நாகாரீகங்களைப் போல சீனம், சப்பான், கொரீயா ஆகிய கீழ்த் திசை நாகாரீகங்களும் அதே காலத்தின வாக அறியப்படுகின்றன. ஒரு புதுக் கருத்து ஒரோவொருவாரீடம் தோன்றி பின் யாங்ஙனம் பிறருக்கு பரவலுறுகிறதோ அதே போல தொழில், இயல், இசை, நாடகம், கட்டுமானம், ஒழுக்க வழக்கு ஆகியனவும் தொடக்கத்தில் ஒரு மூல நாகாரீக மக்கள் மூலம் அவர்கள் பிற இடங்களுக்குப் பெயர்ந்து அங்கு நாகாரீகங்களை ஏற்படுத்தியதாலேயே உலக நாகாரீகங்களில் சில பொதுத்தன்மைகள் இன்று நாம் காண்பது. அந்த மூலத் தாய் நாகாரீகம் தமிழர் நாகாரீகமே என்பதை விளம்ப எழுந்ததே இக்கட்டுரை.

இந்த தாய் நாகாரீகத்தார் உலகின் விளிம்புதொறும் சென்று தம் நாகாரீகத்தை தோற்றுவிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்நாகாரீகங்களைத் தோற்றுவிக்கவில்லை மாறாக, இவர்களுடைய வாழிடத்திற்கு ஏற்பட்ட கேட்டின் காரணமாக இவர்கள் கடற்கரைகளை அண்மித்த நிலப் பகுதிகளின் ஆற்றங்கரைகளில் இந்நாகாரீகங்களை ஏற்படுத்தினர்.

இத்தாய் நாகாரீகத்தார் இந்தியப் பெருங்கடலில் அமைந்து இருந்த பல ஆயிரம் தீவுகளைக் கொண்ட தென்புலத்தைத் தாயகமாக கொண்டிருந்தனர் என்றும் இந்நிலம் கடல்மட்டம் உயர்ந்ததால் கடலில் மூழ்கியது என்று தமிழறிஞர்கள் இலக்கியச் சான்றுகளின் வாயிலாக அறிவித்துள்ளனர். சில அறிஞர்கள் தங்கம், வெள்ளி முதலாய உலோகங்களின் தேவை கருதியே தாய் நாகாரீகத்தார் வடக்கு நோக்கி பல திசைகளிலும் புலம் பெயர்ந்ததாக சொல்கின்றனர்.


இவ்வாறு தென்கடலில் அமைந்திருந்த நிலங்கிளிலிருந்து புறப்பட்ட இம்மூல நாகாரீகத்தார் வடமேற்கே எதியோபியா, எகிபது, சுமோரீயா, ஈலம் ஆகிய நாகாரீகங்களையும், வடக்கே சிந்து ஆற்றுக் கரையிலும், வடகிழக்கே நெடுந்தொலைவு பெயர்ந்து சீனா, சப்பான், கொரீயா ஆகிய நாகாரீகங்களையும் அங்கு அக்கால் ஏற்கெனவே வாழ்ந்து கொண்டிருந்த பழங்குடி மக்களுடன் இணைந்து உருவாக்கி இருந்தனர் என்பது அறிஞர்களின் முடிபு.

இந்நாகாரீகங்களின் மன்னர் பெயர்களை ஆய்கின்ற போது ஒரு நாகாரீக மன்னன் பெயர் இன்னொரு நாகாரீக மன்னன் பெயாரீலும், சிறப்பாக கீழை நாகாரீக மன்னன் பெயர் மேற்கு நாகாரீக மன்னன் பெயாரீலும் காணப்படுவதால். இவர்கள் ஒரு பொதுவான மூல நாகாரீகத்தின் வழிவந்தோர் என்பது புலன் ஆகின்றது. இப்பெயர்கள் தமிழாய் இருப்பது அந்த மூல நாகாரீகம் தென் கடலின் தமிழர் நாகாரீகம் தான் என முடிபு கட்டலாம்.

இம்முடிபை மெய்ப்பிக்கும் வகையில் கீழை நாகாரீகங்களின் மன்னர்கள் சிலருடைய பெயர்களை சிந்து முத்திரை, சங்க இலக்கியம், பானை ஓடுகள் ஆகியவற்றில் இடம் பெற்ற தமிழ்ப் பெயர்களுடனும், பிற நாகாரீக மன்னர் பெயர்களுடனும் ஒப்பிட்டு ஆய்கிறது இக்கட்டுரை.

இந்த நாகாரீகங்களை அமைப்பதில் உலகின் முதல் சுற்றுக் கடலோடிகளான தமிழ மீனவர்கள் அளப்பறிய பங்காற்றி உள்ளனர் என்பது இந்நாகாரீகங்களில் காணப்படும் யாமை > ஆமை, யாமன் > ஆமன், அங்கு > சங்கு > சங்கன், பரவன், வங்கன், கடலன், உப்பன், சி ப்பன், நந்து > நந்தன் > நத்தன் ஆகிய பெயர்கள் தெளிவுபடுத்துகின்றன.

பேரா. இரா. மதிவாணாரீன் Indus script Dravidian (IsD), 1995, என்ற நூல் இதற்கு பொரீதும் உதவுகிறது.

தமிழர் தம் மூல இடத்திலிருந்து பிற பகுதிகளுக்குப் பரவி நாகாரீகங்களை ஏற்படுத்திய காலத்தில் தமிழில் ஆண் பால் ஒருமையைச் சுட்டும் பெயர் ஈறு `அன்' இல்லாமையால், சிந்து வெளி உட்பட இந் நாகாரீக மன்னர் பெயர்கள் பல `அன்' ஈறு பெறாமலேயே உள்ளன. தவிர சில போது ககரம் சகரமாயும், வகரம் பகரமாயும், அகரம் ஒகரமாயும் திரீந்து உள்ளன. னகர மெய் ஈறு (ன்) சீனத்தில் ஙகர மெய் ஈறாக ( ங்) திரீந்துள்ளது.

சீன நாகாரீக வேந்தர்கள் பெயர்

Shang ஆள்குடி 1600 - 1300 BC மன்னர்

Tai Wu > தமிழில் தாய் ஊ > தாயன் ஊ என செப்பமாக படிக்கலாம். சங்க இலக்கியத்தில் விண்ணன் தாயன் என்பது ஓரு பிராமணன் பெயர். இங்கு அன் ஈறு பெறாமல் உள்ளது. சிந்து வெளி முத்திரையிரீல் மட்டும் இடம் பெறும் பெயர் ஊ. IsD,1995,பக். 105, 86.

Qin ஆள்குடியில் ஒரு மன்னனுடைய ஈமப் பெயர் Er shi Huangdi 246 -210 B.C. தமிழில் எர் சரீ குய்யன் தி என செப்பமாக படிக்கலாம். தமிழில் எல் > எர் > எரீ என தி¡ரீயும். இதற்கு சிவப்பு, ஒளி என பொருள் உண்டு. எ¡ரீபத்தர் 63 நாயன்மாருள் ஒருவர். எரீ கல் முத்தரசு 575 A.D. ஒரு களப்பிர மன்னன். போனீசிய திரை நாகாரீக மன்னன் பெயர் Eri Aku 1400 B.C. தமிழில் எ¡ரீ அக் > எரீ அக்கன் என செப்பமாக படிக்கலாம். அக்கன் சிந்து முத்திரைப் பெயர் IsD,1995, பக். 97. Tangun வழிவந்த கொரீய மன்னன் பெயர் Maereuk 704 - 646 B.C. தமிழில் மா எரீ அக் > மா எரீ அக்கன் என செப்பமாக படிக்கலாம். தமிழில் மா என்பது பெருமை, முதுமையை சுட்டும்.

மேலை Han ஆள்குடியில் ஒரு மன்னனது ஈமப் பெயர்

Ai Di 6-1 B.C. தமிழில் ஆய் தி என்பது செப்ப வடிவம். கடை எழுவள்ளல்களுள் ஒருவன் ஆய் அண்டிரன் என்பான். குமாரீ மாவட்டம் ஆய் மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்ததாகவும் வேணாட்டு அரசர்கள் ஆய் மரபினர் என்றும் குமாரீ வரலாறு கூறுகின்றது. கொரீய நாகாரீகத்தில் Gija வழிவந்த ஒரு மன்னன் பெயர் Ae of Gojoseon 220 - 195 B.C. தமிழில் ஆய் என்பது செப்ப வடிவம்.

மேலை Qin அரசில் ஓரு மன்னன் பெயர்

Qifu Chipan 412 - 428 A.D. கி·பு சிப்பன் என்பது செப்ப வடிவம். கி·பு அவன் குடும்பப் பெயர். சிப்பன் தமிழ மீனவர் பெயர். மேலை நாகாரீகத்தில் Zippan, சிப் என்றெல்லாம் வரும்.

முதல் நிலை Chouchi அரசில் ஒரு மன்னன் பெயர்

Yang Nandi 317 - 334 A.D. தமிழில் யாண் நந்தி என படிக்கலாம். யாண் குடிப் பெயர். நந்து > நந்தி > நந்தன் என்று வி¡ரீயும். நந்து என்பது சங்கையும் நத்தையையும் குறிக்கும் பழந் தமிழ்ச் சொல். அக-246:1,புற-266:4, தொல்- 584:1 , 618:1 நந்திக் கடல் ஈழத்தின் ஒரு கடற்கரை. அன் று பெறாமல் இகர ஈறு பெற்றுள்ளது.

இரண்டாம் நிலை Chouchi அரசில் ஒரு மன்னன் பெயர்

Yang Nandang 429 - 441 A.D. தமிழில் யாண் நந்தன் என செப்பமாக படிக்கலாம். இங்கு ன் > ங் என தி¡ரீந்துள்ளது. பக்த நந்தனார் 63 நாயன்மாருள் ஒருவர். சிந்து முத்திரைகளிலும், பானை ஓட்டு சிந்து எழுத்துகளிலும் உள்ள பெயர் நந்தன். IsD,1995, பக். 111

Yang wende 443 - 454 A.D. தமிழில் யாண் வென்றி என செப்பமாக படிக்கலாம். வென்றி > வெற்றி என பொருள்படும்.

வெற்றிவேல் செழியன் 117-160 கி.பி. ஒரு பாண்டிய மன்னன்.

பண்டு றகரம் டகர ஒலிப்பு பெற்றிருந்தது.

கொரீய நாகாரீக வேந்தர்கள் தங்கன் வழிமரபில் முதல் மன்னன்

Dangun Wanggeom 2333 - 2240 B.C. தமிழில் தங்கன் வங் இயம் > தங்கன் வங்கன் இயன் என செப்பமாக படிக்கலாம். தமிழில் பொன்னைக் குறிக்க தங்கம் என்ற சொல் பிற்காலத்தில் எழுந்தது. சிந்து முத்திரைகளில் மட்டுமே தங்க. மாதங்க ஆகிய பெயர்கள் உள்ளன. கொ¡ரீயர் தங்கன் என்பதற்கு வேந்தன் என பொருள் கொள்கின்றனர். IsD, 1995, பக் . 151, இயன், இயனன் என்பதும் சிந்து முத்திரைப் பெயரே. IsD,1995, பக். 120. இங்கு அன் ஈறு அம் ஈறாகி உள்ளது. வங்கன் தமிழக சிந்து எழுத்து பொறித்த பானை ஓடுகளிலும், சிந்து முத்திரைகளிலும் இடம் பெறும் பெயர்.

Gueul 2099 - 2083 B.C. தமிழில் குய்யல் > குய்யன் என செப்பமாக படிக்கலாம். அன் ஈறு அல் ஈறாகி வந்துள்ளது. குய், குய்ய சிந்நு முத்திரையில் வழங்குகிறது. IsD,1995, பக். 203. அன் ஈறு போலவே அல் ஈறும் பண்டு வழங்கியது. தென் அமொரீக்க இன்கா நாகாரீக அண்ணன் தம்பி மன்னர்கள் Ninan Cuyochi 1527 A.D. தமிழில் நின்னன் குய்யக்கி & Huascar 1527 - 1532 A.D. தமிழில் குய் அழகர்.

Seohan 1993 - 1985 B.C. தமிழில் சீயகன் என்பது செப்ப வடிவம். சீய என்ற வேரைக் கொண்டு பல பெயர்கள் உள்ளன. சீயாத்தம்மன் ஒரு பெண் தெய்வம். நன்னூல் இயற்றிய பவணந்தியாரை ஆதாரீத்த கங்க மன்னன் சீயகங்கன். தமிழின் சிறப்பெழுத்தான அன் ஈறு கொரீயத்தில் வந்துள்ளது.

Ahan 1834 - 1782 B.C. தமிழில் அகன் > அக்கன் என செப்பமாக படிக்கலாம். அல் ஈறு பெற்றும் வரும். சிந்து முத்தி ரைப்பெயர். IsD,1995, பக் 272.

Gobul 1721 - 1661 B.C. தமிழில் காப்பல் > காப்பன் என செப்பமாக படிக்கலாம். கொ¡ரீயத்தில் அல் ஈறு வந்துள்ளது. சிந்து முத்திரைப் பெயர் IsD, 1995, பக். 225.

Sotae 1337 - 1285 B.C.தமிழில் சாத்தை > சாத்தன் என செப்பமாக படிக்கலாம். தமிழகத்தில் இன்றும் சாத்தப்பன்,

சாத்தைய்யன் என இன்றும் வழங்குகிறது. பாண்டியன் கீரன் சாத்தன் கி.மு. 150 -140. சிந்து முத்திரைப் பெயர். IsD,1995, பக்.98-99. கொரீயம் இங்கு ஐ கார ஈறு பெற்றுள்ளது.

Amul 1237 - 1161 B.C. தமிழில் ஆமல் > ஆமன் என செப்பமாக படிக்கலாம். யாமன் > ஆமன் என தி¡ரீயும். முடத்து + ஆமக் + கன்னியார் > முடத்தாமக்கன்னியார் ஒரு பெண் புலவர். கொரீயம் அல் ஈறு பெற்றுள்ளது. ஐகார ஈறு வருவதும் உண்டு. எதியோபிய மன்னன் பெயர் Amen 2455 - 2434 B.C. தமிழில் ஆமன். ஒரு யுதேய அரசன் பெயர் Amon 642 - 640 B.C. தமிழில் ஆமன்.

Duhol 545 - 509 B.C. தமிழில் துக்கல் > துக்கன் என செப்பமாக படிக்கலாம். இது ஒரு பழந்தமிழப் பெயர். தென் மரா ட்டியர் தமிழ் மரபினரே அவர்களிடையே இப்பெயர் உள்ளது. காட்டாக , துக்காராம். இங்கு அல் ஈறு பெற்றுள்ளது.

Mulli 461 - 425 B.C. தமிழில் முள்ளி > முள்ளன் என செப்பமாக படிக்கலாம். இங்கு இகர ஈறு வந்துள்ளது. ஒரு கேரள ஊர்ப்பெயர் முள்ளியூர்.

Goye Olga 295 - 237 B.C. தமிழில் கா இ அழக > காயி அழகன் என செப்பமாக படிக்கலாம். காஇ சிந்து முத்திரையில் மட்டுமே இடம் பெறும் பெயர். kenoyer அணியால் கண்டு எடுக்கப்பட்ட இருபுற அச்சு முத்திரையில் சாமன் காஇ என ஒருபுறத்தே உள்ளது. காயன் எனபது இகர ஈறு பெற்று காயி என்றும் ஆகும்.

Gija Line

Dohoe 778 - 776 B.C. தமிழில் தோகை என்பது செப்பமான வடிவம். தமிழுக்கே உ¡ரீய சிறப்புப் பெயர். மயில் இறகின் தொகுப்பு தோகை எனப்படும். தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட வணிகப் பொருள்.

Nak Seong 722 - 703 B.C. தமிழில் நக் சேயன் > நக்கன் சேயன் என செப்பமாக படிக்கலாம். ஆந்திர கர்னூல் மாவட்டத்தில் கிட்டிய சிந்து எழுத்தில் கலிங்கு நக்க நந்தி என உள்ளது. சேயன் சிந்து முத்திரைப் பெயர். IsD, 1995, பக். 195.

சீன தாக்கத்தால் இஙகு னகர மெய்- ன் ஙகர- ங் மெய்யாகியது

Munyeol 776 - 761 B.C. தமிழில் முனியல் > முனியன் என செப்பமாக படிக்கலாம். முனியன், முனியப்பன் என பெயர்கள்

இன்றும் தமிழகத்தில் வழங்குகின்றன. கொரீயப் பெயர் அல் ஈறு பெற்றுள்ளது.

Hwara 413 - 385 B.C. தமிழில் கூவர > கூவிரன் என செப்ப மாக படிக்கலாம். இங்கு ககரம் †கரமாகியது. கொடுமணல் அகழாய்வு ஓர் அறிமுகம் என்ற குறு நூலுள்,1994, க. இராசன்,

அங்கு கிட்டிய ஒரு பிராமி எழுத்து பொறித்த தாழியில் கூவிரன் ஆதன் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளதாக பக். 33 இல் குறிப்பிட்டுள்ளார்.

Bukbuyeo வழியில் ஒரு மன்னன் பெயர்

Godumak 108 - 60 B.C.E. தமிழில் கடு மாக் > கடு மாக்கன் என செப்பமாக படிக்கலாம். மாக்கன் தமிழக ஊர்ப்புறங்களில் இன்றும் வழங்கும் பெயர். கொ¡ரீயத்தில் அன் ஈறு பெறாமல் இப்பெயர் உள்ளது.கடு பெருமைக் கருத்தைச் சுட்டும் பெயர். கேரள எடக்கல் குன்றின் பாறையில் கடுமான் பூதன் சேர கோ என்று ஒரு கல்வெட்டு பொறிப்பு உள்ளது. இன்னும் சில, செல்வக் கடுங்கோன் வாழி ஆதன் 87-62 B.C. பாண்டியன் கடுங்கோன் 475-490 AD.

Silla வழிவந்த மன்னன்

Namhae Cha Chaung 4BC -24AD

தமிழில் நங்கை சா சாண் > நங்கன் சா சாணன் என செப்பமாய் படிக்கலாம். இப் பெயர் சிந்து முத்தரையில் மட்டும் காணப்படுகிறது. IsD,1995, பக். 138,262. நங்கன் நல்லூர் சென்னையின் புற நகர். பக்ரா நங்கல் போல அல் ஈறு பெற்றும் வரும். ய > ச தி¡ரீபில் யாணன் > சாணன் என்றாகும். ன் > ங் என இப்பெயாரீல் தி¡ரீந்து உள்ளது.

Silla வழிவந்த அரசன்

Minae 839 - 838 A.D. தமிழில் இதை மின்னை > மின்னன் என செப்பமாக படிக்கலாம். கொரீயப் பெயர் ஐகார ஈறு பெற்று உள்ளது. மின்னன் தமிழக ஊர்ப்புறப் பெயர். இன்றும் இணையதள வாக்காளர் பட்டியலில் இதைக் காண இயல்கின்றது.

Goryeo வழிவந்த அரசனுக்கு ஓரெழுத்துப் பெயர்

U 1374 - 1388 AD தமிழில் ஊ என்பது முது பண்டையப் பெயர். சிந்து முத்திரைகளில் மட்டுமே காணப்படுகிறது.IsD,1995, பக் 217. ஆதலால் சிந்து முத்திரைகளைப் படிப்பது மிக இன்றியமையாதது. பேர. இரா. மதிவணன் சாரீயாகவே சிந்து எழுத்துகளை படித்து உள்ளார் என்பதற்கு இது ஒன்றே சான்றாய் கொள்ளத் தக்கது.

Joseon வழிவந்த அரசன் பெயர் Yeon Sangun 1494-1506 AD தமிழில் இயன் சங்கன் என்பது செப்பமான வடிவம். இயன் முதல் கொ¡ரீயப் பெயாரீல் விளக்கப்பட்டது. சங்கன் இன்றும் தமிழக ஊர்ப்புறங்களில் வழங்கும் பெயர். வாக்காளர் பட்டியலில் உள்ளது. சங்கனூர் கோயம் புத்தூரீல் உள்ள ஓர் ஊர்ப் பெயர்.

இங்கு ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு பருக்கைப் பதனம் என்ற அடிப்படையில் தமிழ், தமிழர் நாகாரீகப் பழமையை எடுத்து உரைக்க சில பெயர்கள மட்டுமே ஒப்பாய்வு செய்யப்பட்டு உள்ளன. இப்பெயர் ஆய்வில் ஒலி ஒப்புமை மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டது; பொருள் ஒப்புமை பார்க்கப்படவில்லை. இந்நாகாரீகங்களுடன் 13 -14 ஆம் நூற்றாண்டு வரை தமிழகம் தொடர்பு கொண்டிருந்ததால் பிற்பட்ட கால தமிழர் பண்பாடும் அங்கு பரவி இருக்கும், அப்பண்பாட்டுப் பரவலின் காலம் குறித்து சர்ச்சை எழும் ஆதலால் பண்பாட்டுக் கூறுகளும் இங்கு ஆயப்படவில்லை. இந்த பெயர் ஒப்பாய்வை தொடக்க கட்ட (prima facie) ஆய்வாக மட்டுமே கொள்ள வேண்டும் .

உண்மையில் இப்பெயர் ஒப்பாய்வு தமிழர் நாகாரீகத்திற்கும் பிற நாகாரீகத்திற்கும் உள்ள பண்பாட்டுத் தொடர்பை ஆய்வார்க்கு பொரீதும் உதவியாய் இருக்கும் . இக்கட்டுரையின் நோக்கமும் அதுவே.

அறிஞர் சிலர் தமிழர் சுமோரீய நாகாரீகத்தினின்று சிந்துவெளி வழியாக தென்னிந்தியாவில் குடியேறியதாக கருத்து உரைத்து உள்ளனர். தமிழர் ஏற்படுத்திய கீழை நாகாரீகங்களின் மட்கலப் பண்பாடு 10,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையன,அதோடு 9,500 ஆண்டுகளுக்கு முன்னேயே நெற்பயிர் வேளாண்மை சீனாவில் தொடங்கிவிட்டது எனும் போது காலத்தால் சற்று பிற்பட்ட சுமோரீய நாகாரீக தமிழர்க்கு பாலை நிலங்கள், பனி மலைகள், பள்ளத்தாக்குகள் யாவையும் கடந்து இக்கீழை நாகாரீகங்களைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற நெருக்கடம் எழுந்ததாக தொரீய வில்லை. எனவே இக்கூற்று தள்ளத்தக்கது. தவிர சிந்து வெளித் தளங்களான மெர்கர், இலக்கியன் தரோ ஆகியன 9000ஆண்டுகள்,இதாவது, சுமோரீயாவை விட் பழமையானவை என்பது ஈண்டு நோக்கத்தக்கது. கீழை நாகாரீகத்தில் ஒன்றான சப்பான் குறித்து ஏற்கெனவே `சப்பானியர் பெயர்களில் தமிழ் வடிவம்' என்ற தலைப்பில் ஒப்பாய்வு செய்யப்பட்டுவிட்டது.

References:
List Of Korean Monarchs

--
சேசாத்திரீ

6.66667
Your rating: None Average: 6.7 (3 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

நாளைய தலைமுறைக்கு நல்ல ஒரு


10

நாளைய தலைமுறைக்கு நல்ல ஒரு தகவல். மேலும், இது போன்ற தகவல் பல எழுதுங்கள்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


VISWAM's படம்

நல்ல தகவல்.


3

நல்ல தகவல்.