rajudranjit's படம்

வணக்கம் தமிழக மக்களே! நமக்கு வேலியாக இருப்பது நமதுக் காவல்துறை ஆனால் அங்கு நடக்கும் அநீதிகளுக்கு வேலியாக இருப்பது சமூக(மக்களாயம்) விரோதிகள் எனும் போது மனதிற்கு ஒரு நெருடல் உண்டாகின்றது தானே!

நான் சமூக விரோதிகள் எனச் சொன்னது அக்காவல் துறையிலே பணிபுரியும் சிலபேர்களைத் தான், ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் சிலபேர் அமைந்துவிடுகின்றார்கள்,

ஒன்று மதம் மற்றொன்று சாதி அடுத்தது பணம் அதே போல் அரசியல்வாதிகளின் அட்டூழியம் இவைகளுக்கு அடிபணிந்து அடிமையாக அவர்கள் எறியும் பிச்சைக்காசிற்கும் மது குப்பிகளுக்கும் வணக்கம் வைக்கும் காவல்துறையின் பணியாளர்கள் எப்படி இவர்களால் அவமானம் இல்லாமல் வாழ முடிகின்றது,

அரசாங்கத்தில் இவர்களுக்கு பணி செய்வதற்கான ஊதியம் தருவதில் குறைபாடு உள்ளதனால் இவர்கள் இப்படி செய்கின்றார்களா? இல்லை இவர்கள் பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்வதற்கு இக்காவல்துறையை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டே இப்பணியில் சேர்ந்துள்ளார்களா?

காரணம் கடைநிலைக் காவலரில் இருந்து மேல்மட்டத்தின் உச்சமானப் பதவியில் இருப்பவர்கள் வரை தலை சொறிந்து காசு எறிகின்ற கயவர்களுக்கு உடந்தையாக இருந்து தவறுகளுக்கு துணை போகும் இவர்கள் அரசாங்க உத்தியோகம் என்ற பெயரில் நமது பணத்தை ஊதியமாக வாங்கிக் கொண்டு அப்பாவி பொதுமக்களுக்கு தொந்தரவும் பயமும் அளிப்பதற்கா அரசு இவர்களை பணியில் அமர்த்தியுள்ளது?

ஆளும் கட்சிக்கு ஒரு மாதிரியும் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மாதிரியும் ரௌடிகளுக்கு ஒரு மாதிரியும் உதவி செய்வதற்கு அப்பாவி பொதுமக்களிடம் இவர்கள் நடிக்கும் நடிப்பிற்கு அவமானப்படவேண்டியது தமிழக அரசும் அதை ஆளும் தலைமையும் தான் என நினைக்கும் போது வாக்களித்த பொதுமக்கள் எதற்கு ஒரு அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்,

பெரும்பாலும் தமிழகத்தில் ரௌடிகள் செய்யும் அட்டூழியத்திற்கு காவல்துறையின் நயவஞ்சக ஒத்துழைப்பு தானேக் காரணம்,

அந்தக் காலக் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் யாரிடமும் குறிப்பிட்டு பணி நேரத்தில் மட்டுமில்லாமல் எப்போதும் நண்பராக இருந்தாலும் ஒரு தேநீர் கூட வாங்கிக் குடிப்பதை அவமானமாக நினைப்பார்கள் என்று எனது தந்தையார் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கின்றேன்,

ஆனால் இப்போது காவல் சீருடையில் இருக்கும்போது மது அருந்துவது என்பது நாகரீகமாகிவிட்டது, பேருந்துகளில் குடும்பத்துடன் போகும்போது தனது துறையைச் சொல்லி பயணச்சீட்டு வாங்குவதை தவிற்கின்றனர், கடைகளுக்கு சென்றால் அதிகாரத்தைப் பயன்படுத்தி இலவசமாகப் பொருட்களை பெறுகின்றனர்,

பொதுமக்களின் நண்பன் என்று காவல்துறையைச் சொல்லி அவர்கள் கயமைத்தனம் செய்பவர்களின் நண்பர்களாக உருமாறி கயவ‌களுக்கு அவர்கள் தப்புவதற்கு வழி சொல்லித் தருகின்றனர்,

காவல் நிலையத்திற்கு ஏதாவது பிரச்சனை என்று முறைமை கொடுக்க‌ சென்றால் அவர்களிடமே பணம் வசூல் செய்கின்றார்கள், முறைமை கொடுப்பவரிடம் காகிதம் எழுதுகோல் வாங்கி வரச் சொல்கின்றார்கள்,

ஆனால் குற்றவாளியிடமும் பிரச்சனையைச் சொல்லி அவனிடமும் பணத்தை வாங்கிக் கொண்டு சமாதானமாக போவதற்கு முறைமை கொடுக்க சென்றவரை பயமுறுத்தி பணிய வைக்கின்றனர், இது தான் காவல் துறையின் சிறப்பானப் பணியா?

பெரும்பாலும் ரௌடிகள் என்று தெரிந்தே அவர்களை காவல்துறையைச் சேர்ந்தவர்கள் எந்த எச்சரிக்கையும் செய்யாமல் பண்டிகைக் காலங்களில் அவர்களிடம் ஏதாவது பொருட்களை பரிசாக பெற்று கொண்டு ரௌடிகளுக்கு சுதந்திரம் கொடுக்கின்றார்கள் அதனால் பொதுமக்களும் காவல்துறையில் முறைமை செய்வதற்கு பதில் தமக்கு தெரிந்த ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சியினரிடம் சென்று முறைமை செய்கின்றார்கள், இது காவல்துறைக்கு மட்டுமின்றி அரசாங்கத்தின் மெத்தனப் போக்கையுமல்லவாக் காட்டுகின்றது,

தமிழகக் காவல்துறை சிறப்பாக இருந்த நிலைமைப்போய், பொருக்கிகளிடம் அடிமையாக இருக்கின்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்,

ரௌடிகளுக்கு உள்ள சுதந்திரம் பொதுமக்களுக்கு இல்லாமல் போனது நினைத்து அக்காவல்துறையில் உள்ள நேர்மையான காவலர்களே மனம் நொந்து போயுள்ளனர் எனும்போது நேர்மைக்கு அரசு எப்படி மரியாதை தருகின்றது என்று புரிந்து கொள்ளவும் பொது மக்களே!

அரசு ஏற்று நடத்தும் காவல்துறையை தனியார் மயமாக்கிவிட்டால் மிகவும் நன்றாகயிருக்கும் என்று நினைக்கத் தோன்றுகின்றது,

எல்லாவற்றிகும் அரசைக் குறைக்கூறி என்ன பிரயோசனம் என நினைக்க வேண்டாம், சிலக் கட்டுப்பாடுகள் காவல்துறையில் இல்லாததனால் வருகின்ற துன்பம் தான் பொதுமக்களுக்கு,

ரௌடிகளுக்கு, எப்போது தண்டனை கடுமையாக கொடுக்க காவல்துறை வழி செய்கின்றதோ அந்த நிமிடம் முதல் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும், அப்பாவி பொதுமக்களும் நிம்மதியாக இருப்பார்கள்

5.66667
Your rating: None Average: 5.7 (3 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

ரௌடிகளைக் கட்டுப்படுத்த


6

ரௌடிகளைக் கட்டுப்படுத்த காவல்துறை சரிவராது. அதற்கு இராணுவம் தான் சரி.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rajudranjit's படம்

அன்பரே ரௌடிகள் நல்லவர்கள்


அன்பரே ரௌடிகள் நல்லவர்கள் தான் அவர்களை குற்றத்தில் ஈடுபட தூண்டிவிடுவதே கா வல்(ள்)துறையைச் சேர்ந்த சிலர் தான், இராணுவத்திடம் கொடுத்தால் கேட்கவே வேண்டாம் அதனிலும் கா வல்(ள்) துறையே மேலென சொல்ல நேரிடும்!