umami12's படம்

தாய்மையின் குழைவும் தந்தையின் பரிவும் பூமியின் பொறுமையும் பொறுப்புள்ள புன்னகையும் துணை வாடத்தான் வாடும் ஓருயிர் உணர்வும் எங்கே தோன்றுகின்றனவோ அங்கே வாழ்வதுதான் காதல்!

காமம் முன்னால் தள்ள, நாணம் பின்னால் இழுக்கும் நாடகமே காதலில் சுவை.

இளமைக் காதலுக்கு இதயமில்லை. நடுப்பருவக் காதலுக்கு இதயமே தலைவன்.

காதல் உன்னதமானதென்று முதன் முதலில் சொன்னவனே, அதில் தோல்வி கண்டவனாகத்தான் இருந்திருப்பான்!

அர்த்தமில்லாமல் வாழ்கிறோம் என்பதை உணரும்போது, சிலபேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்... நிறையபேர் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

தன்னைப் பார்ப்பதற்காக மனிதன் கண்ணாடியைப் படைக்காமலிருந்தால், உலகத்தில் காதலில் பாதி குறைந்திருக்கும்.

கண்ணையே படைக்காமல் இருந்திருந்தால், காதல் எவ்வளவு புனிதமாக இருந்திருக்கும்!

கண்ணும் கண்ணும் பார்க்கின்றன. மனமும் மனமும் நினைக்கின்றன. உடலும் உடலும் துடிக்கின்றன. இது காதல்!

இளமையிலே காதல்தான் ஒவ்வோர் உயிருக்கும் முதற்கொள்கை.

சரித்திரத்தில் கணிசமான அளவு போர்க்களங்களை இதுதான் ஏற்படுத்திற்று.

நீதிமன்றத்தில் பாதி மன்றம் இதனால் விளையும் தகராறுகளைக் கவனிக்கிறது. தற்கொலைகளிலே முக்கால்வாசிக்கு
இது தலைமை வகிக்கிறது.

படுகொலைகளிலே பாதியை இதுதான் விவசாயம் செய்கிறது. அரசியல் தலைவர்கள் பெறமுடியாத இடத்தைப்
பத்திரிகைககளின் மூலம் இது பெறுகிறது.

இது காதல்!

காதல் இரண்டு வகைப்படும். ஒன்று, தோல்வியுறுவது! மற்றொன்று, முப்பது வயதுக்கு மேல் வருவது!

இயற்கையை முறியடிக்க, எல்லா வழிகளையும் கண்ட விஞ்ஞானிகள், காதலையும் முறியடிக்க முயன்றார்கள்.
அவர்கள் வெற்றி பெற்றிருக்கக் கூடும், அவர்களுக்கு காதல் இல்லாமலிருந்தால்!

கைகோத்துக்கொண்டு, கடற்கரைக்குப் போகும் காதல் நாகரிகம், வெகு விரைவில் காதலைக் கசப்பாக்கிவிடுகிறது.

நாம் மீண்டும் பழங்காலத்துக்குத் திரும்பியாகவேண்டும். தாழிட்ட கதவும் தடைப்பட்ட காதலுமாகத் தலைவனும் தலைவியும் போராடும் இலக்கியச் சுவைக்குத் திரும்பியாக வேண்டும்.
heart

3.75
Your rating: None Average: 3.8 (4 votes)

கருத்துகள்

smariappan's படம்

great kannadhasan.....


5

great kannadhasan..... Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap : teddy teddy teddy teddy teddy teddy teddy teddy teddy teddy teddy teddy teddy teddy teddy teddy teddy teddy teddy teddy


mari


umami12's படம்

நன்றி


நன்றி நண்பரே! bye


uma


kumaran's படம்

(No subject)


5

Smile heart


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


umami12's படம்

நன்றி


நன்றி அண்ணா! heart


uma


kannan.s's படம்

இப்பயெல்லாம் காசு இருந்தால்


1

இப்பயெல்லாம் காசு இருந்தால் தான் காதல் தோழி.... (அனுபவத்தில் சொல்கிறேன்.)

Love Dingue Love


நான் கவி அல்ல முயற்சி செய்கிறேன் என் உணர்வுகளை வெளிப்படுத்த....


umami12's படம்

நன்றி


நன்றி தோழி!உண்மையான காதலுக்கு காசு தேவையில்லை தோழி,உங்களின் மோசமான அனுபவத்திற்க்கு என் வருத்தங்கள். heart


uma


vinoth's படம்

இன்றைய கால கட்டத்தில்


4

இன்றைய கால கட்டத்தில் திரைப்படங்களில் எவ்வாறு காதல் புனிதமாக காட்டப்படுகிறதோ அதே போல அன்றைய இலக்கியத்திலும் காதல்.

அதற்காக இலக்கியக்காலத்தில் திறந்துவிட்ட காதல் என தவறாக நினைத்து உருகி விட வேண்டாம்..

தலைவன் தலைவி அன்பை சிறப்பாகக்கூற காதலே சிறந்த வழி. இங்கே தலைவன் தலைவி கணவன் மனைவி என்ற பொருளிலும் வரும்.

இன்றைய திரைப்படங்களை பார்த்துவிட்டு இளசுகள் காதலித்துவிட்டால் தங்களை கதாநாயக நாயகியாக கற்பனை செய்து கொள்வது முட்டாள் தனம், காலத்தின் கோலம்.
காதல் அவர்களை வாழ்க்கையில் கதாநாயகர்களாக ஆக்கப்போவது இல்லை. இது திரைப்படத்தில் மட்டுமே சாத்தியம்..


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


umami12's படம்

நன்றி


நன்றி நண்பரே! heart


uma


Ragavan's படம்

மிக அருமை வினோத்..


மிக அருமை வினோத்..


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..