dharshi's படம்

கூப்பிடும் தூரத்தில் இருந்தாலும் ஒன்றரை வருடங்களுக்கு முன் நான் அன்று குமரிக்கு சென்றது கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து. வயிற்றுப்பிழைக்காக வெளியூர் கிளம்பிவிட்டால் சில விசயங்களை தியாகம் செய்யத்தான் வேண்டும்.

எதுவும் மாறவில்லை கட்டணங்களைத்தவிர. ஓன்றிரண்டு கட்டிடங்கள் மட்டும் புதிதாக எழும்பியிருந்தன. கடற்கரைக்கு நுழையும்போதே மூக்கை பதம்பார்க்கும் நாற்றம், முத்து,சிப்பி மாலை விற்பவர்கள், கடலை விற்பவர்கள், கடலை போடுபவர்கள், பாதுகாப்பு கொடுக்கிறேன் என்ற பாவனையில் கடலை, மாங்காய் விற்பவர்களிடமும் அதிகாரத்தைக் காட்டும் காவலர்கள், கடலில் குளிக்க வந்தவர்கள், குளிப்பவர்களை பார்க்க வந்தவர்கள், கிளிஜோசிய கிழவர்கள், கைரேகை ஜோசிய கிழவிகள் என அதே தோற்றம்.

காந்தி மண்டபம் செல்ல நபருக்கு ஒரு ரூபாய் வசூலிக்கிறார்கள். முன்பு இலவசமாக அனுமதித்திருந்தார்கள். இங்கு கட்டணத்தை அதிகரித்தால் வரும் சிலபேரும் வருகையை நிறுத்தி விடுவார்கள் என்பதனால் இருக்கும். உள்ளே காந்தியின் சில படங்களும் சில வாசகங்களும் தவிரை ஒன்றுமில்லை. அவ்வப்போது வரும் சில வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு காந்தியைப்பற்றி கூற ஒரு சில கைடுகள் இருக்கிறார்கள். மற்றபடி உள்ளநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளே நுழைவது மிகக்குறைவு. தூங்கும் நேரத்தை தவிர பகல் முழுவதும் காந்தி சிரிக்கும் நோட்டைத்தான் பார்க்கிறோம், அதை காந்தி மண்டபத்தில் சென்று வேறு பார்க்க வேண்டுமா என்று நினைத்திருக்கலாம்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தையும், சூரிய உதயம் அஸ்தமனத்தையும் காண மட்டுமே அதிகம் வருகிறர்கள். அய்யன் வள்ளுவனை காணும் பல பேருக்கு அய்யனின் திருப்புகழை அறியாதவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் ஏற்பாடு அத்தனை திருப்திகரமாக இல்லை என்பதை என் கருத்து. மற்றும் அய்யன் திருவள்ளுவரை நின்றபடி வைத்திருக்கும் சிலையில் எனக்கு என்னவோ அத்தனை உடன்பாடு இல்லை.

133 அடியில் சிலையை வைக்க வேண்டும் என்பதற்காகவே தெய்வப்புலவரை நிற்கவைத்திருக்கிறார்கள். ஒருகையில் சுவடியும் ஒரு கையில் எழுத்தாணியில் வைத்துக் கொண்டு உட்காந்திருக்கும் வள்ளுவரில் தெய்வீகம் தெரிகிறது. தற்கால அற்பமானிடர்கள் முன் வள்ளுவர் எழுந்துநிற்பது சரியாக தோன்றவில்லை.

மாவட்டத்தில் கலெக்டர்களும், தொகுதியில் மந்திரிகளும் மாறிக்கொண்டித்தானிருக்கிறார்கள்.ஆனால் ஒரு தேசிய சுற்றாலத்தலம் மட்டும் மாறாமல் அப்படியேஇருக்கிறது.

நன்றி :- நாஞ்சில் பிரதாப்

0
Your rating: None

கருத்துகள்

vinoth's படம்

மாவட்டத்தில் கலெக்டர்களும்,


மாவட்டத்தில் கலெக்டர்களும், தொகுதியில் மந்திரிகளும் மாறிக்கொண்டித்தானிருக்கிறார்கள்.ஆனால் ஒரு தேசிய சுற்றாலத்தலம் மட்டும் மாறாமல் அப்படியேஇருக்கிறது.

சில விசயங்களில் நிஜம்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

நன்றி


நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


VISWAM's படம்

முன்பு நான் பார்த்த (வள்ளுவர்


முன்பு நான் பார்த்த (வள்ளுவர் சிலை வைப்பதற்கு முன்பு) கன்னியாகுமரியை அப்படியே கண் முன் கொண்டு நிறுத்தி விட்டீர்கள். நன்றி

dharshi's படம்

நன்றி


நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


paramaswari's படம்

வள்ளுவர் சிலையை


வள்ளுவர் சிலையை தூரத்திலிருந்துதான் பார்க்க அனுமதிக்கிறார்கள். அருகில் போக அனுமதியில்லை.சுத்த வேஸ்ட்....................[போர்ட் கட்டணம்]

dharshi's படம்

இது என்னக்கு தெரியாத விஷயம்


இது என்னக்கு தெரியாத விஷயம் நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


paramaswari's படம்

விவேகானந்தர் பாறை


விவேகானந்தர் பாறை பரவாயில்லை....................[இருந்தாலும் எனக்கு திருப்தியில்லை ]

dharshi's படம்

பலர் இவற்றை தமக்கு


பலர் இவற்றை தமக்கு திருப்தியில்லை என்று தான் சொல்கிறார்கள்


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

திருவள்ளுவர் சிலையில் உள்ளே


திருவள்ளுவர் சிலையில் உள்ளே மேலே வரை ஏற அனுமதிப்பார்களே, நான் ஏறியிருக்கேன்

ஏதாவது பிரச்சனையாக இருக்கும்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


paramaswari's படம்

என்ன பிரச்ச்னையென்றாலும் அதை


என்ன பிரச்ச்னையென்றாலும் அதை நிவர்த்திக்க வேண்டும் அதை விடுத்து டூரிஸ்ட்களின் பணத்தை மட்டும் பிடுங்குவதிலேயே குறியாக இருந்தால் எப்படி?போர்டில் ஏறி யவுடந்தான் சொல்கிறார்கள் திருவள்ளுவர் சிலைக்கு போகாது என்று.

vinoth's படம்

எந்த நேரம் போனீங்க மாலை வேளை


எந்த நேரம் போனீங்க
மாலை வேளை என்றால், அல்லது கடல் அலை அதிகமாக இருந்தால் சிலநேரம் சீக்கிரமாக திருப்பி விடுவார்கள்,
எல்லாம் முன்னெச்சரிக்கை தான்.
பிரச்சனை வந்த பிறகு என்றால் பலருக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

சரியா கேட்டிங்க கன்னியாகுமரி


சரியா கேட்டிங்க கன்னியாகுமரி ஆக்கள் தான் இதுக்கு பதில் சொல்லணும்


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


paramaswari's படம்

ஆமாம் . மாலை வேளைதான்.


ஆமாம் . மாலை வேளைதான். மத்தியானம் 3 மணி.

vinoth's படம்

3 மணிக்கெல்லாம்


3 மணிக்கெல்லாம் நிறுத்தமாட்டார்கள், வேறு ஏதாவது பிரச்சனையாக இருந்திருக்கலாம்.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


paramaswari's படம்

எது எப்படியோ சுற்றிப் பார்த்த


எது எப்படியோ சுற்றிப் பார்த்த திருப்தியில்லை.

vinoth's படம்

ம்.....


ம்.....


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


AANMEKAN's படம்

ஆன்மாவுக்கு புண்ணியம்


ஆன்மாவுக்கு புண்ணியம் கிடைக்கும் கன்னியாகுமரியில்,,,இப்போது மனதிற்கும்,உடலுக்கும் புண்ணியம் கிடைக்கும்,,தெரியுமா,,

dharshi's படம்

என்னங்கோ இவர் புதுசா என்னமோ


என்னங்கோ இவர் புதுசா என்னமோ சொல்லுறாரு


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


AANMEKAN's படம்

இவர்


இவர் ,,,,யாருணித்தெரியவில்லையா,,,,ம்ம்ம்

dharshi's படம்

தெரியாமலா நன்னா புரியுது, பட்


தெரியாமலா நன்னா புரியுது, பட் நீங்க என்னத்த சொல்லுறீங்கன்னு தான் புரியல


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


AANMEKAN's படம்

தர்ஷினி இறந்தவங்களுக்கு திதி


தர்ஷினி இறந்தவங்களுக்கு திதி கொடுக்கும் புண்ணியபூமி குமரி,,,இப்போது உயிரோடு யிருக்கும் போதே திதி கொடுக்குறாங்க,

dharshi's படம்

//இப்போது உயிரோடு யிருக்கும்


//இப்போது உயிரோடு யிருக்கும் போதே திதி கொடுக்குறாங்க// அது எப்படிங்க முடியும் ??


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


paramaswari's படம்

திதிகொடுக்கும் இடம் எல்லாம்


திதிகொடுக்கும் இடம் எல்லாம் புண்ணிய பூமியா? பாவ பூமியாக அல்லவா மாறியிருக்கும்....................

dharshi's படம்

ஆஹா எப்படி உங்களால மட்டும்


ஆஹா எப்படி உங்களால மட்டும் இப்படி எல்லாம் முடியுது


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


paramaswari's படம்

அதெல்லாம் இயற்கையா வர்ரது


அதெல்லாம் இயற்கையா வர்ரது டர்ஷி!