ஒரு சந்நியாசி. அவர் ஒரு நாள் ஒரு கனவு கண்டார். கனவில் அவர் சொர்க்கத்துக்குப் போகிறார். அங்கே ஒரு பெரிய திருவிழா நடந்து கொண்டிருக்கிறது,
எங்கே பார்த்தாலும் அலங்கார வளைவுகள்.. வண்ணமயமான விளக்குகள்.. பாதையெங்கும் மலர்கள்....... என கோலகாலமாக திருவிழா நடந்து கொண்டிருக்கிறது
அது என்ன திருவிழா என அவருக்கு புரியவில்லை. அங்கே வந்தவர் ஒருத்தரை நிறுத்தி.....”என்ன விஷேசம் இங்கே” என்று விசாரித்தார்....
“உனக்கு தெரியாதா விஷயம்....? இன்றைக்குக் கடவுளுக்குப் பிறந்த நாள்... அதைத்தான் எல்லாரும் சேர்ந்து கொண்டாடுகிறோம். இதற்காக பிரமாண்ட ஊர்வலம் ஒன்று வரப்போகிறது. இறைவனே அதில் கலந்து கொள்ளப்போகிறார்!” என்றார் அவர்.
உடனே அந்தச் சந்நியாசி ஒரு மரத்து நிழலில் ஒதுங்கி நின்று கொண்டார்.
ஊர்வலம் வந்து கொண்டிருக்கிறது.முதலில் ஒரு குதிரை வந்தது. அதன் முதுகில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் நிறையப்பேர் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.
“இவ்வளவு கூட்டம் இவர் பின்னாடி வருகிறதே..... யார் இவர்?” என்று கேட்டார்.
ஒரு மதத்தின் பெயரைச் சொல்லி, இவர் அந்த மதத்தின் தலைவர்.... இவரைப் பின்பற்றுகிற மக்கள் கூட்டம் பின்னால் வந்து கொண்டிருக்கிறது என்று விபரம் சொன்னார்கள்....
இவர்களுக்கு அடுத்தபடியாக இன்னொரு குதிரை மீது அமர்ந்து இன்னொருவர் வந்து கொண்டிருக்கிறார். அவருக்குப் பின்னாலும் நிறையக் கூட்டம்.
“இவர் யார்?” என்று சந்நியாசி கேட்டார்.
இன்னொரு மதத்தின் பெயரைச் சொல்லி, இவர் அந்த மதத்தின் தலைவர்......இவரைப் பின்பற்றுகிற மக்கள் கூட்டம் பின்னால் வந்து கொண்டிருக்கிறது என்று விபரம் சொன்னார்கள்...
இப்படி ஒவ்வொருத்தராகக் குதிரை மீது வந்து கொண்டிருந்தார்கள். அவர்களைப் பின்பற்றியும் ஒவ்வொரு கூட்டம் வந்து கொண்டிருந்தது.
அந்தப் பெரிய ஊர்வலம் போய்க்கொண்டே இருந்தது. கடைசியாக அது முடிந்தது.
அதன் பிறகு கொஞ்சநேரம் கழித்து, ஒரு வயசான ஆள் குதிரை மீது வந்து கொண்டிருந்தார்.
ஆனால், அவருக்குப் பின்னால் யாருமே இல்லை. அவர் பரிதாபமாகத் தனியே வந்து கொண்டிருந்தார். அவர் அந்த ஊர்வலத்தைச் சேர்ந்தவரா... இல்லையா....... என்பதே தெரியவில்லை!
“இவரு யாரு..... பாவம்! இவரு ஏன் இப்படித் தனியா வந்துக்கிட்டிருக்கார்?” என்று கேட்டார் அந்தச் சந்நியாசி.
“என்ன இப்படிக் கேட்கிறீங்க? இவருதான் கடவுள். இவருக்குத்தான் இன்னைக்குப் பிறந்த நாள்! முன்னாடி போகிற ஊர்வலம் பூரா இவருடைய பிறந்த நாளைக் கொண்டாடுறதுக்காகத்தான்!”
இதைக் கேட்டதும் அந்தச் சந்நியாசிக்குத் திடுக்கென்று தூக்கிவாரிப் போட்டது.
இதுவரையில் கனவு கண்டுகொண்டிருந்தவர் விழித்துக்கொண்டார். அதன் பிறகு யோசித்துப் பார்த்தார்.
உண்மை தான். மக்கள் எல்லாரும் பக்தி மார்க்கத்தில் போவதாக நினைத்துக் கொண்டு பாதை மாறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
கடவுளைப் பின்பற்றுவதாக நினைக்கிறார்கள் பக்தர்கள். ஆனால் கடவுளுக்குப் பின்னால் யாருமே இல்லை!
_____________________________________________________
படித்ததில் பிடித்தது... சிறகை விரிப்போம் நூலிலிருந்து ----------- சரவணமுத்து
கருத்துகள்
(No subject)

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
சிறந்த கோட்பாடு(தத்துவம்).
சிறந்த கோட்பாடு(தத்துவம்).
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
நிறைய சிந்திக்க வைத்தது!!!!
நிறைய சிந்திக்க வைத்தது!!!!

அருைம
அருைம 
வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு
முருகன் , ேசலம்
ஏன் இல்லை...நான் இருக்கிறேன்
ஏன் இல்லை...நான் இருக்கிறேன் 
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
யாரும் இது வரை தெரிந்து
யாரும் இது வரை தெரிந்து கொள்ளா(முயற்ச்சிக்கா)த உண்மைதாங்க.....

















