joshi2010's படம்

கம்யூட்டரில் முக்கிய வேலை செய்து கொண்டிருக்கும் போது, அவசர வேலையாக சில நிமிடங்கள் எழுந்து செல்ல வேண்டி வரும். அந்த நிமிடங்களில் யாராவது கம்யூட்டரை ஏதாவது செய்துவிட்டால் பிறகு வருத்தப்பட்டு பிரயோசனமில்லை.

அந்த மாதிரி நேரங்களில் இந்த மென்பொருள் மிகவும் பயன்படும். இதை நாம் நிறுவியதும் நமது டாக்ஸ்பாரில் பூட்டு சிம்பளுடன் அமர்ந்து விடும். அதை கிளிக் செய்தால் கம்யூட்டர் லாக் ஆகி விடும். மீண்டும் நாம் கடவுச்சொல் கொடுத்து தான் ஓப்பன் செய்ய முடியும்.

இதை பதிவிறக்கி உங்கள் கணணியில் நிறுவி அதை ஒப்பன் செய்யுங்கள். அதில் கேட்கும் விண்டோவில் முதலில் உங்கள் கடவுச்சொல்லையும், அதையே மீண்டும் கான்பார்ம் செய்தும் தட்டச்சு செய்து ஓ,கே. கொடுங்கள்.

இப்போது பார்த்தால் உங்கள் டாக்ஸ்பாரில் பூட்டு போன்ற அடையாளத்தை காணலாம். .இப்போது பூட்டினை நீ்ங்கள் கர்சரால் டபுள் கிளிக் செய்யும் சமயம் உங்களுக்கு லாக் செய்தற்கான விண்டோ ஓப்பன் ஆகும். அவ்வளவுதான் உங்கள் கம்யூட்டர் லாக் ஆகிவிட்டது.

இனி யாராவது கர்சரால் கிளிக் செய்தால் அவர்களுக்கு கடவுச்சொல் கேட்டு எச்சரிக்கை செய்தி கிடைக்கும்.

இப்போது நீங்கள் ஏற்கனவே கொடுத்த கடவுச்சொல்லை சரியாக கொடுத்தால் மட்டுமே மீண்டும் விண்டோ ஓபன் ஆகும்.

டவுன்லோட் இணைய முகவரி :

http://www.4shared.com/file/2HMJ-kaT/PLP.html


கருத்துகள்

Tamil's படம்

நண்பரே தயவு செய்து வேறு


நண்பரே

தயவு செய்து வேறு தளங்களில் இருந்து பதிவுகளை இங்கே பதிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
அது மிக முக்கிய பதிவாக இருப்பின் அவ்வாறு போட வேண்டிய கட்டாயத்தில் தயவு செய்து பதிவின் நிஜ முகவரியையும் எழுதியவர் பெயரையும் பதிவில் குறிப்பிட்டு அந்தந்த தளத்திற்குரிய மரியாதையையும் கொடுக்க வேண்டுகிறோம். மேலும் எழுத்தாளறின் அனுமதி பெற்றே பதிவை வெளியிட வேண்டுகிறோம்.

தளம் சிறப்பாக செயல்பட தங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றிகள்


tamilnanbargal.com


joshi2010's படம்

வணக்கம்,,, தவறிற்கு


வணக்கம்,,,

தவறிற்கு வருந்துகிறேன்...... நான் படித்து, அதனை பயன்படுத்திய விபரத்தை... தான் மற்றவர்களும் பயன்படுத்த வேண்டும் என்று ஒரே நோக்கத்தில் தான் இத்தளத்தில் பதிந்தேன்..... தவறுக்கு வருந்துகிறேன்......


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com