வாஷிங்டன்:
வாழைப்பழத்தில் உள்ள ரசாயனம் மூலம் எய்ட்ஸ் நோய் வராமல் தடுக்கலாம் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.எய்ட்ஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை; நோய் வரும் முன் , தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காண்டம் பயன்படுத்தினால் எய்ட்ஸ் வராமல் தடுக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, அமெரிக்க விஞ்ஞானிகள் இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில் புது தகவலை கண்டுபிடித்துள்ளனர்; வாழைப்பழத்தில் உள்ள கெமிக்கல் மூலம் எய்ட்ஸ் வராமல் தடுக்கலாம் என்பது தான் அது.வாஷிங்டன் நகரில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்; பொதுவாக தாவரங்களில் இருக்கும் ரசாயனம், நோய் தொற்றுகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை. வாழைப்பழத்தில் இருக்கும் லேக்டின் என்ற ரசாயனம், எய்ட்ஸ் வராமல் தடுக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதை உறுதிப்படுத்தும் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
கூடுதல் தகவல்; வாழைப்பழத்தில்
கூடுதல் தகவல்; வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம்.
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.




