joshi2010's படம்

எம் உறவுகளின் உயிரையாவது காத்திடுவோம்.......
எம் உறவுகளின் உயிரையாவது காத்திடுவோம்.......
எம் உறவுகளின் உயிரையாவது காத்திடுவோம்.......

நியூஸிலாந்துக்கு அகதிகளாக செல்லும் வழியில் இந்தோனேசியா கடற்படையினரால் இடைமறிக்கப்பட்ட 87 இலங்கைத் தமிழர்களும் தாம் பயணித்த கப்பலில் இருந்து இறங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.இந்த கப்பல் தற்போது இந்தோனேசிய டாங்ஜூங் பினாங் தளத்தில் நங்கூரமிட்டுள்ளது.

இது கடந்த சனிக்கிழமையன்று இந்தோனேசியாவின் பின்டான் தீவான ரினானுக்கு அருகில் வைத்து இந்தோனேசிய கடற்படையினரால் மறிக்கப்பட்டது.

இந்தநிலையில் கப்பலில் உள்ளோர் தமக்கு நியூஸிலாந்து வேண்டும் என்ற சுலோகங்களை ஏந்திய வண்ணம் நியூஸிலாந்து கொடிகளுடன் இருப்பதாக ரொயட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.எனினும் நியூஸிலாந்தின் பிரதமர் ஜோன் கே, இந்த அகதிகளை தாம் வரவேற்கப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியத் தமிழர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கை : ‍
(அறிக்கை இணைக்கப் பட்டுள்ளது)
கொடிய சிங்கள அரசின் கோரப்பிடியிலிருந்து தமது உயிரைமட்டும் காக்கும் நோக்கோடு நியூசிலாந்து நோக்கி சர்வதேசக் கடலில் பயணித்துக்கொண்டிருக்கும் போது இந்தோனேசியா கடற்படையால் வழிமறிக்கப்பட்டு பலவந்தமாக இந்தோனேசிய கடற்பரப்புக்குள் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவர்கள் இந்தோநேசிய அரசினால் சிறீலங்காவிற்கு திருப்பியனுப்பப்படும் சாத்தியம் உள்ளதாகவும், அவ்வாறு நடைபெற்றால் தாம் சாவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அக்கப்பலில் உள்ள எம் அன்பு உறவுகளில் ஒருவரான திரு.செல்வக்குமார் அவர்கள் தெரிவித்துள்ள நிலையில் அவர்களைக் காப்பாற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களினுடையதே.

அந்த வகையில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள எமது ஊடக அறிக்கையினை உங்கள் ஊடகங்களினூடாக மக்கள் மத்தியில் கொண்டுசென்று உடனடியாக மக்களை செயற்படவைக்க உதவுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி
ஊடகப் பிரிவு
பிரித்தானியத் தமிழர் ஒன்றியம்

0
Your rating: None