vinoth's படம்

உலக தமிழ் செம்மொழி மாநாடு- மு. கருணாநதி அவர்கள் பாடலுக்கு  ஏ. ஆர். ரஹ்மான் இசை - பாடல் வரிகள் - mp3

உலக தமிழ் செம்மொழி மாநாடுக்காக மு. கருணாநதி அவர்கள் பிற தமிழின் மிக பிரபல செய்யூள் வரிகளை கலந்து எழுதி பாடலுக்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்

இந்த பாடலை பாடியவர்கள்: ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா, டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசீலா, அருணா சாய்ராம், பாம்பே ஜெய்ஸ்ரீ, கார்த்திக் , ஹரிணி, சின்மயி, ஹரிகரன், சுவேதா மோகன், ஜி.வி.பிரகாஷ், பென்னி தயள், ஸ்ரீனிவாஸ், விஜய் யேசுதாஸ், டி.எல்.மகாராஜன், நித்யஸ்ரீ, சவும்யா, எம்.ஒய்.அப்துல் கனி, எம்.காஜாமொய்தீன், எஸ்.சாபுமொய்தீன், பி.எல்.கிருஷ்ணன், நரேஷ் அய்யர், குணசேகர், சுருதிஹாசன் மற்றும் பலர்

பாடல் வரிகள்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி - அதுவே
செம்மொழி செம்மொழி -நம் தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!

Download here

8.44828
Your rating: None Average: 8.4 (29 votes)

கருத்துகள்

Ragavan's படம்

பதிந்தமைக்கு மிக்க நன்றி...


பதிந்தமைக்கு மிக்க நன்றி...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..