இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்குத் தனிப்பட்ட பயணமாக சென்றுள்ள சுப்பிரமணிய சாமி, அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணிய சாமி கொடுத்துள்ள பேட்டி விவரம்:
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு சோனியா காந்தியும், அவரது இத்தாலி குடும்பத்தினரும் மறைமுக ஆதரவு அளித்தனர்.
ஆனால், விடுதலைப்புலிகள் இயக்கம், இந்தியாவுக்கு எதிரான இயக்கம் என்பதால் அந்த இயக்கத்தை ஒழித்துக் கட்டியவர் மகிந்த ராஜபக்ச.
இதனால் ராஜபக்சவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட வேண்டும்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்தான் தோல்வியடைந்திருக்கிறது. தமிழ் மக்கள் தோல்வியடையவில்லை என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் சுப்பிரமணிய சாமி
நன்றி : தமிழ் விண்
பின் குறிப்பு :
சுப்பிரமணிய சாமி அவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு " பாரத ரதனா" விருது கொடுக்கச் சொல்வதன் காரணம் என்ன?????/
எனில் இந்தியாவின் பவர் பிரதமர் அன்னை சோனியாவுக்காக , விடுதலைப் புலிகளை மட்டுமல்ல, இந்தியாவின் ஆயுதங்கள் கொண்டு தமிழினத்தையும் கொன்று, புதைத்தும், மனித உயிர்களை மண்ணாய் நினைத்து கனரக இயந்திரங்களைக் கொண்டு விதைத்தவர்க்கு இது கூட சோனியா செய்ய மாட்டாரா என்ன?? ஏற்கெனவே தமிழீன சமூகத்தை அழிக்க ஆயுதமும் கொடுத்து, அதில் இடிந்த வீடுகளைக் கட்ட கோடிக்கணக்கில் பணத்தை தந்தவர்கள் தானே .........
உலகமே இலங்கையின் போர்க் குற்றத்தை விசாரிக்க ஆதரவு கொடுத்த போது இந்தியா மட்டும் இலங்கையின் பக்கம்.........
குத்துங்க எஜமான் குத்துங்க..... நாங்களும் தமிழர்கள் தான்..... நீங்க என்ன செய்தாலும்..... நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம்...... எனில் நாங்கள் வீ(ஈ)ர தமிழர்கள்...... நாங்கள் தொலைக்காட்சியில் இந்தியா இலங்கை கிரிக்கெட் ( கிரிக்கெட் மைதானத்தில் தமிழின தலைவரின் பேரன் இலங்கை தொப்பி போட்டு ரசித்தாலும்) அலல்து மானாட மயிலாட பார்த்து ரசிப்போம்.........
- joshi2010's blog
- Login or register to post comments
- 235 reads
கருத்துகள்
கருணாநிதி சார்பாக நான் மதிய
கருணாநிதி சார்பாக நான் மதிய சாப்பாட்டுக்கு பின் ஒரு மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கலாம் என முடிவு செய்துள்ளேன்
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
முன்னாள் பாரதப் பிரதமர்
முன்னாள் பாரதப் பிரதமர் இராஜீவ் காந்தி கொலையில் சிலர் சுப்பிரமணி சுவாமி மீது சில சந்தேகங்களை சொல்லியுள்ளார்கள், அதை முறைப்படி சி.பி.ஐ மூலம் விசாரித்துவிட்டு அதன் விவரம் முற்றிலும் தெரிந்த பின் ரஜபக்க்ஷேவிற்கு பாரத ரத்னா கொடுக்க முயற்சி எடுக்கலாம்,
அதற்கு முன் இந்திய அரசால் பாரத ரத்னா கொடுத்து கௌரவிக்கப்பட்டவர்கள் அனைவரிடமிருந்தும் உள்ள பாரத ரத்னா விருதை திரும்ப பெற்றுக் கொண்டு ரஜபக்க்ஷேவிற்கு கொடுப்பது பற்றி யோசிக்கலாமே,
என்ன செய்ய கொஞ்சம் அதிகம் படித்தாலே மரை கழன்று விடும்போலும், அதையும் ஒரு செய்தியாக வெளியிட்ட ஊடகங்களை என்ன சொல்ல? 
ராஜீவ்கொலையில்
ராஜீவ்கொலையில் சுப்ரமணியசுவாமியும் விசாரிக்கப்படவேண்டிய ஆளு தான்!!!
பாரதரத்னா விருது பரிந்துரை செய்வதற்கும் ஒருவரைமுறை வைத்தால் தான் இதெல்லாம் சரியாகும்!!










