இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு
பற்றாக்குறை அதிகரிப்பால், மாநிலம் முழுவதும், அறிவிக்கப்பட்ட மின்வெட்டு, 8 மணி நேரமாக, இன்று முதல் உயர்த்தப்பட உள்ளது. கோடைக்காலம் துவங்கும் நேரத்தில், அதிகரிக்கப்பட உள்ள இந்த மின்வெட்டு, மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும். மின் பற்றாக்குறையால், ஏற்கனவே தமிழகம் புழுங்கி வருகிறது. புதிய மின் திட்டங்கள் அமலாக, இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் ஆகும். செயலில் உள்ள திட்டங்களிலும், சொல்லிக்கொள்ளும்படியாக உற்பத்தி இல்லை. ஆனால், பயன்பாட்டு அளவு, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.உற்பத்திக்கும், பயன்பாட்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை ஈடுகட்ட முடியாமல், தமிழக மின் வாரியம் திணறி வருகிறது. இதை சமாளிக்கும் வகையில், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில், 1 மணி நேரம், புறநகர் மற்றும் பிற நகர்ப்பகுதிகளில், 3 மணி நேரம், கிராமப்புறங்களில், 6 மணி நேரம் என, மூன்று விதமாக, அறிவிக்கப்பட்ட மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.அறிவிக்கப்பட்டது தான் இவ்வளவே தவிர, பெரும்பாலான இடங்களில், இதை விடவும் அதிகமான நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.பாகுபாடு கிடையாது: நிலைமை இன்னும் மோசமானதைத் தொடர்ந்து, இன்று முதல், தலைநகர் சென்னை தவிர, மாநிலம் முழுவதும், 8 மணி நேரம் மின்வெட்டை அமல்படுத்த, வாரியம் உத்தரவிட்டுள்ளது.இதில், நகர்ப்பகுதி, கிராமப்பகுதி என்ற பாகுபாடே
கிடையாது. எல்லா இடங்களிலும், 8 மணி நேரம், "கரன்ட் கட்' இருக்கப் போகிறது. சென்னையில், அறிவிக்கப்படாமல், 2 மணி நேரம் வரை மின்வெட்டு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதே, 8 மணி நேரமாகிவிட்ட நிலையில், சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில், அதை விடவும் அதிகமாகவே மின்வெட்டு இருக்கும் என அஞ்சப்படுகிறது. எந்த நேரம்?இந்த புதிய மின்வெட்டு, இரண்டு விதங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. காலை, 6 முதல், 9 மணி வரை, 3 மணி நேரமும்; பகல், 12 முதல், மாலை, 3 மணி வரை, 3 மணி நேரமும்; மாலை, 6 முதல், இரவு, 7 மணி வரை மற்றும் 8 முதல், 9 வரை, தலா 1 மணி நேரம் என, மொத்தம், 8 மணி நேரம் மின்வெட்டு வருகிறது.
இன்னொரு முறைப்படி, காலை, 9 மணி முதல், 12; மாலை, 3 முதல் 6; இரவு, 7 முதல், 8 மற்றும் 9
முதல், 10 என, 8 மணி நேரம் இருட்டில் மூழ்கப் போகிறது.மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டு விட்டாலும், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதால், இது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. குளிர்காலம் முடிந்து, கோடைக்காலம் துவங்கும் நேரம் இது; சும்மாவே, புழுக்கத்துக்கு பஞ்சமிருக்காது. மாணவர்களுக்கான தேர்வுக் காலமும் நெருங்கிவிட்டது; பரீட்சை பதட்டத்தில் இருக்கும் அவர்களுக்கும், இந்த மின்வெட்டு ஓர் இடியாகவே இறங்கும்.
நன்றி : தினமலர்
பின் குறிப்பு :
தற்பொழுதே எங்கள் பகுதிகளில் குறைந்தது 6 முதல் 7 மணி நேரங்கள் மின் தடை ஏற்படுகின்றது....... பகலில் தான் என்று இல்லை.... இரவு நேரங்களிலும்.....காலையில் சரியாக 6 மணிக்கு மின் வெட்டு விழுகின்றது....... பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோரின் நிலை மிகவும் பரிதாபமானது..... மேலும் சாதாரண பாமர மக்கள் இப்போது சொல்லும் ஒரே வார்த்தை ..... " இதற்கு ஐயா (கலைஞர்) பரவாயில்ல" என்று தான்...... ஏனென்றால்... கலைஞர் ஆட்சியிலும் கரண்டு போகும்... அதிகபட்சமாக மூன்று மணி நேரங்கள் தான்..... மேலும் கரண்ட் போகும் நேரம் எல்லாருக்கும் தெரியும்.... ஆனால் இன்றைய நாட்களில் யாருமே கணிக்க முடியாத நேரங்களில் மின் தடை ஏற்படுவதால் பொது மக்கள் மிகவும் அல்லல்படுகின்றனர்......
நான் எந்த கட்சியையும் குறைக் கூறவில்லை... ஆனால் என்னைப் பொறுத்தவரை...... " தலைவன்" என்பவர் தொலை நோக்குப் பார்வை உடையவராய் திட்டமிடல் அவசியம்... வரும் நாட்களில் மக்கள் தொகை வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, அதற்கு ஏற்றார் போல் மின் தேவைகளைக் கணக்கிட்டு மின் உற்பத்திக்கு நல்ல திட்டங்களை ஆரம்பித்தாலே.......கட்டாயம் ஒரு நாள் தமிழகம் ஒளிரும்.... இல்லையேல் மீண்டும் நாம் கற்காலத்தை நோக்கி செல்ல வேண்டியது தான்...... கடந்தக் காலங்களில் மின் தேவைக்காய் எந்த ஒரு முயற்சியும் நம் மாநில அரசுகள் எடுக்கவில்லை...... மத்திய அரசு எடுத்த கூடங்குளத்தை செயல்படுத்தவும் முதல்வர் அவர்கள் ஏன் இன்னும் மொளனம் சாதிக்கின்றார் என்றும் பாமரனாகிய எனக்கு விளங்கவில்லை.....
ஒரு கொசுறு செய்தி : சங்கரன் கோவில் பகுதியில் இப்போதெல்லாம் மின் வெட்டு அவ்வளவாக இல்லை.....
- joshi2010's blog
- Login or register to post comments
- 262 reads
கருத்துகள்
ரொம்ப கஷ்டம் வேலை செய்யவே
ரொம்ப கஷ்டம்
வேலை செய்யவே முடியவில்லை.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...






