இந்தியர்களே இதற்கு முன் நான் எழுதியிருந்ததை படித்தீர்களா? என்ன செய்ய நானெல்லாம் இப்படி எழுத வேண்டிய அவசியத்தை என் நாடு எனக்கு உருவாக்கி தந்திருக்கின்றது! இதில் பெருமை கொள்ள ஒன்றுமில்லை அதே வேலை உழைக்கும் வர்க்கமும், ஆளும் வர்க்கமும் மக்களாட்சியின் மகத்துவத்தை இதுவரை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பது தான் வெட்கம்!
இந்தியப் பொருளாதாரம் 6.9 சதவீதம் வீழ்ச்சியைக் கண்டுள்ளது, இந்திய நிதியமைச்சர் சொல்கின்றார் இவ்வாண்டு 7.5 சதவீதம் பொருளாதாரத்தை உயர்த்திக் காட்டுவோம் என்று, அவருக்கும் எமது நாட்டிற்கும் வாழ்த்துக்கள்!
கடந்த ஆண்டு 8.5 சதவீதம் வளர்ந்திருந்த பொருளாதாரம் ஒரு 3 மாதக்காலத்தில் 6.9 சதவிகிதம் சரிவைக் கண்டிருக்கின்றது என்றால் அதற்கானக் காரணம் கேட்டால் மத்திய நிதியமைச்சு பள்ளிக் கூட மாணவன் சொல்லும் காரணத்தை போல் சொல்வது ஏற்புடையதாக இல்லை, எதனால் வீழ்ச்சியை இந்தியா சந்தித்துள்ளது, இந்தியா வளரும் நாடா? வளர்ந்த நாடா?
இப்படி பலக் கேள்விக் கனைகள் காத்திருக்கின்றன மத்திய அரசை தாக்குவதற்கு, அதே சமயம் தனது பொருளாதார வீழ்ச்சியை அன்னிய முதலீட்டால் சரி செய்ய மத்திய அரசு எண்ணுவது இந்திய உழைப்பாளிகளை உள்நாட்டு முதலீட்டார்களை அவமானப்படுத்துவதாக உள்ளது. அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியதாகவும் ஆகிவிடும்
ஏன் இன்னும் இந்தியா சுதந்திரம் அடையவில்லையோ என எண்ணத் தோன்றுகின்றது! இதுபோல் அன்னிய முதலீடு வந்தால் இந்திய அரசிற்கு இலாபம் வருமென்றால் மீண்டும் பிரிட்டிஷாரே ஆண்டால் இந்திய அரசியலும் ஆட்சியும் சிறப்பாக அமையுமோவென எண்ணத்தோன்றுகின்றது
உலக சந்தையின் கணக்குப்படி இப்படியெல்லாம் ஆகின்றது என்றால் அது எதனால் என்றக் கேள்விக்கும் பதில் வேண்டுமே!
அப்படி பார்க்கும்போது கச்சா எண்ணையே காரணம் என்பது விக்ரமாதித்தன் கதையில் வரும் வேதாளம் கேட்கும் கேள்வியைப் போல் அமைந்து விடும்,
இந்தியப் பாராளுமன்ற உருப்பினர்களுக்கு ஐபேட் வாங்குவதற்கு ரூபாய் 50,000 கொடுக்க முன்வரும் பொருளாதார வீழ்ச்சியடைந்த இந்தியா இன்னும் இதுபோல் எத்தனை ஊதாரித் தனமான செயல்களில் ஈடுபட்டிருந்திருக்கும் என்பதை இந்தியக் குடிமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும், ஏனென்றால் அவர்களெல்லாம்(MP) உண்ணும் உணவிற்கே கஷ்டப் படுகின்றவர்களா? இல்லை ஊழல் செய்யாத,கையூட்டு வாங்காத உத்தமர்களா? சொல்லுங்கள் இந்தியர்களே?!
இந்தியர்களின் உழைப்பும் ஜனநாயகமும் அடமானத்திற்கு சென்றுவிட்டதா? பண்டைய பண்டம் மாற்று பொருளாதரக் கொள்கையை இந்தியா இன்று புதிப்பிக்காதது ஏன்?
இதியப் பொருளாதாரம் உள்நாட்டு பண்டம் மாற்று முறையின் மூலம் சீர்திருத்த நிறைய வாய்ப்புக்கள் உள்ளது, அன்னிய முதலீட்டாளர்களால் முதலீடு செய்யப்பட்ட பணம் மீண்டும் அவர்களுடனேயே இந்தியப் பணத்தையும் வெளிநாட்டிற்கு ஒரு பறவையை வைத்து பல பறவைகளை பிடிக்கும் முறையைப் போல் சென்றுவிடும்.
இந்திய அரசே கவனம் தேவை! கவனம் தேவை!
- rajudranjit's blog
- Login or register to post comments
- 354 reads






