yarlpavanan's படம்

அழகான படித்த பெண்ணைப் பார்த்துப் பழகி பதிவுத் திருமண நிகழ்வரை வந்தாச்சு. பதிவுத் திருமண நிகழ்வில் மணமகனைக் காணவில்லை. உண்மையை ஆய்வு செய்து பார்த்த போது, "குறைந்த சாதிப் பெண்ணைக் கட்டவேண்டாம்" என்று மணமகனைப் பெற்றோர் தடுத்தனராம்; ஆகையால் மணமகன் பதிவுத் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையாம்.

என்னடாப்பா கதை இப்படியாச்சு என்கிறீர்களா? குறித்த பெண்ணின் உள்ளம் எத்தனை துயரடைந்து இருக்கும் என்கிறீர்களா? இவை உங்கள் கேள்விகள்.

காதலிப்பது சுகம், திருமணம் செய்வது சிக்கலா? அழகு, படிப்பு, பணம் எல்லாம் பார்த்துக் காதலிக்கலாம்; குறைந்த சாதிப் பெண் என்று பெற்றோர் தடுத்ததால் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளிப்பதா? இவை எனது கேள்விகள்.

குறித்த ஆண் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளித்த பின், தன் காதலியைச் சந்திக்கவும் இல்லை; நடைபேசியில் கதைக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரத்தைக் கணக்கிலெடுக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரைப் போக்க தோழிகள் முயற்சி எடுத்தும் பயனில்லை. குறித்த பெண்ணின் நிலையைக் கருதி, குறித்த ஆணுக்கு என்ன தண்டனை வழங்கலாம்.

பெற்றோருக்காகத் தன் காதலைத் தூக்கி எறிபவர்களும் மனைவியை விவாகரத்துச் செய்பவர்களும் உள(மன) நோயாளர்களே! இவ்வாறான ஆண் உள(மன) நோயாளர்களைக் குணப்படுத்த வழி கூறுங்களேன்.

இங்கு நான் குறிப்பிட்ட ஆண் உள(மன) நோயாளி இல்லை என்றால், பெற்றோரின் பேச்சைத் தூக்கி எறிந்து போட்டு குறித்த பெண்ணைத் திருமணம் செய்வதே சரி. குறித்த பெண்ணின் துயரைப் போக்கி மகிழ்வான வாழ்வைக் கொடுக்க இதுவே சரியான வழி! இது எனது கருத்து.

இது பற்றிய உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். இங்கு நான் குறிப்பிட்ட ஆண் போன்றவர்களால் பெண்கள் சாவதற்கு இடமளிக்கிறீர்களா? ஆண்களே பதில் சொல்லுங்களேன்.

Sad


கருத்துகள்

vinoth's படம்

காதலிக்கும் முன்னே இதை


காதலிக்கும் முன்னே இதை யோசித்திருக்க வேண்டும்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

காதல் வரும் வேளை இவற்றைச்


காதல் வரும் வேளை இவற்றைச் சிந்தித்திருக்க மாட்டார்கள். ஆயினும், பதிவுத் திருமணத்திற்கு உடன்பட்ட பின் ஒளித்தும் பெண்ணைப் பாதிப்புறச் செய்வதும் ஆணுக்கு அழகல்லவே.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rajudranjit's படம்

அன்பரே! தங்களது பதிவை படிக்க


அன்பரே! தங்களது பதிவை படிக்க தாமதமானதற்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்,

எப்போது தகுதி பார்த்தாரோ அக்காதலனை மனதிலிருந்து முற்றும் அழிப்பது தான் அந்த பெண்ணிற்கு உத்தமம்.

என்னைப் பொருத்தவரை மதம் சாதி என்பதை காரணம் சொல்லுபவர்கள் இவ்வுலகத்தில் வாழ தகுதியற்றவர்கள்,

நாம் எவ்வளவு உதாரணங்களைச் சொன்னாலும் மக்களில் சிலர் ஏற்றுக் கொள்வதில்லை, வாயாலே தின்று ஆசன வழி புறம் தள்ளுவோர் தானே எல்லோரும் இதிலென்ன கீழ்சாதி மேல்சாதி

அந்த பெண்ணிற்கு "தனது வாழ்க்கையைக் கடவுள் பாதுகாப்பு கொண்டதாக அமைத்துள்ளார்" என்பதை நினைத்து சந்தோஷப்பட வேண்டும்.

வாழ்க்கையில் துணிந்து முன்னோக்கி செல்வதை எண்ணமாகக் கொண்டு அப்பெண் வாழ்ந்து காட்ட வேண்டும், தோல்விகள் எல்லாம் தவறுகளால் தான் கிடைக்கின்றன, சில இதில் மாறுபடலாம்

தவறானக் காதல் இது, ஆணோ பெண்ணோ எப்போது முரண்படுகின்றார்களோ அவர்களை விலக்கிவிட்டு நாம் சரியான பாதையை தேர்ந்தெடுத்து செல்வது தான் சரி

yarlpavanan's படம்

தங்கள் வழிகாட்டலை


தங்கள் வழிகாட்டலை வரவேற்கிறேன்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil