வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு என்பதை விளக்கும் நமது பண்டைய பெரியோர்களின் அனுபவ மொழி இது.

ஒருவன் எதை விதைக்கிறாரோ அதுவே விளையும். நெல் பயிரிட்டால் அதற்குப்பதிலாக சோளம் விளையாது. அதே போல நாம் நல்லது செய்தால் நமக்கு நல்லதும் தீயது செய்தால் தீயதும் விளையும்.

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு. அது நாம் செய்த வினையைப்பொறுத்தே அமையும்.

இந்த வினை பயன் உடனே இல்லாமல் எப்போதாவது கூட கிடைக்கலாம். மறுபிறவியில் நம்பிக்கை உள்ள நம்மவர்கள் ஒரு பிறவியில் நாம் செய்யும் செயலுக்கான பலன் (கர்மபலன்) நிச்சயம் அடுத்தப்பிறவியில் கிடைக்கும் என்பதை கூறிச்சென்றுள்ளார்கள். இது நமது எல்லா இதிகாசங்களிலும் இலக்கியங்களிலும் காணக்கிடைக்கிறது. முக்கியமாக சிலப்பதிகாரத்தைச் சொல்லலாம்.

தொடர்புடைய பழமொழிகள்:
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

வினை - கர்மம், செயல்
தினை - ஒருவகை தானியம்
இருவினைகள் - நல்வினை தீவினை (தீய வினை)
அறுப்பான் - அறுவடை செய்வான்

5.66667
Your rating: None Average: 5.7 (3 votes)

கருத்துகள்

இறையழகன்'s படம்

As you sow, so shall you

As you sow, so shall you reap.
- Galatians 6:7

இறையழகன்'s படம்

இந்தக் கருத்து எல்லா மதப்

இந்தக் கருத்து எல்லா மதப் புத்தகங்களிலும் உள்ளது. ஆனால் இந்துக்கள் மறு ஜன்மத்திலும் இது பொருந்தும் என்று நம்புகிறார்கள். பல புராணக் கதைகளில் இந்த ஜன்மத்தில் ஒருவர் துன்பப்படுவதற்குக் காரணம் பூர்வ ஜன்ம வினைதான் என்று காட்டப்படுகிறது. குறள், கீதை, பைபிள் ஆகிய எல்லா நூல்களிலும் இதைக் காணலாம். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழியும் இதையே விளக்குகிறது. கர்ம வினை பற்றிய கொள்கை சமண மதத்தில் இன்னும் வலுவாக உள்ளது. தமிழ்க் காவியமான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியனவற்றில் வினைப் பயன் நன்றாக விளக்கப் பட்டுள்ளது.

Sepia Krishnamurthy's படம்