வருந்தினால் வாராதது இல்லை.
1. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்
தெய்வத்தா னாகா தெனினு முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் - திருவள்ளுவர்
உடல்வருந்த முயற்சியெடுத்து உழைத்தால் நல்ல பலனை பெறமுடியும், வராது எனநினைத்த பலனையும் கொண்டு வந்துவிடமுடியும்.
2. வருந்தினால் என்பதற்கு வருத்தப்பட்டால் எனவும் பொருள் கொள்ளலாம். எப்போதும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால் அது கேடு. மனம் சார்ந்தே உடலும் இருப்பதால் மனம் வருந்த உடலுக்கு வராத நோய்களும் வந்து சேர்ந்துவிடும்.
(3 votes)

