வட்டிக்கு வாங்கி அட்டிகை பண்ணு அட்டிகை வித்து வட்டியைக் குடு
இது ஒரு மக்களின் நடைமுறை அல்லது மனோபாவ பழமொழி.
அட்டிகை என்பது பெண்கள் இடுப்பில் அணியும் ஒரு ஆபரணம்.
அத்தியாவசிய தேவைகளுக்கு பணம் தேவைப்பட்டால் வட்டிக்கு வாங்குவது நடமுறை. பிறகு வட்டி கட்டியே சொத்தை அழிப்பார்கள்.
அந்த காலத்தில் மட்டுமல்ல இந்த காலத்திலும் தங்க ஆபரணம் என்பது ஆடம்பரமாகவும் அதே சமயம் அந்தஸ்தை நிரூபிக்கும் பொருளாகவு்ம் பார்க்கப்படுகிறது.
ஏழைக்கேற்ற எள்ளுருண்டை மற்றும் விரலுக்கேற்ற வீக்கம் என்பதை மறந்து அந்தஸ்த்தை நிலை நாட்ட ஆபரணம் இல்லா விட்டாலும் வட்டிக்கு எடுத்தாவது ஆபரணம் வாங்கும் பேராசை அவர்களின் அழிவிற்கு காரணமாகும் என்பதை தெளிவாக விளக்கும் பழமொழி இது.
நாம் தஙக ஆபரணம் வாங்கும் போது அதில் செய்கூலி சேதாரம் பார்த்து லாபம் சம்பாதிக்கும் வியாபாரிகள் அதே நகையை விற்கப்போகும போது
அதிலும் சேதாரம் போகத்தான் கணக்கு போடுவார்கள்.
வட்டி கொஞ்சம் தானே பிறகு கொடுத்தால் போதுமே என நினைத்து மெத்தனமாக இருப்பவர்கள் சில காலங்களில் வட்டி அசலை மிஞ்சி அந்த ஆபரணத்தை விற்றாலும் வட்டியை மட்டும் கட்டும் நிலைக்கு வந்துவிடுவார்கள். அதாவது வ்ட்டி அடைபட்டாலும் அசல் அப்படியே கொடுக்க வேண்டியது பாக்கி இருக்கும்.
வட்டிக்கு வாங்கி அட்டிகை பண்ணு அட்டிகை வித்து வட்டியைக் குடு
ஆரம்பரமான அல்லது பகட்டு பேராசை வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

