முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.
இப்பழமொழி மனிதனது ஜாதக அடிப்படையில் கூறப்படும் பழமொழி ஆகும்.
பொதுவாக ஜாதகத்தில் சனிக்கிரகம் துன்பம் கொடுக்கும் கிரகமாக பார்க்கப்படுகிறது. அக்கிரகம் ஒருவன் ஜாதகத்தில் வந்த பின்பு மறுபடி வருவதற்கு முப்பது வருடம் ஆகும். அதுவரை அவருக்கு நல்ல காலமாக இருக்கும்.
எனவே, ஒருவன் தொடர்ந்து முப்பது வருடம் சந்தோஷமாகவும் இருக்க முடியாது, துன்பமாகவும் இருக்க முடியாது. இன்பமும் துன்பமும் மாறிமாறி வந்து கொண்டே இருக்கும்.
(3 votes)

