பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?
பழுத்த பழம் தானாக விழுந்துவிடும். அது கொம்பிலே நிற்றுகொண்டிராது. இது இயற்கை. அதே போலவே
வித்தை படிக்க வந்தவன் அதை படித்ததும் சென்று விடுவான்.
உளவு பார்க்க வந்தவன் இரகசியம் அறிந்ததும் மறைந்து விடுவான்.
நன்கு படித்தவன் மற்றவர்களுக்கு கட்டுப்படாமல் சிறந்த வழியை தேர்ந்தெடுப்பான்.
பறக்கத்தெரிந்ததும் பறவை கூட்டில் அடைந்து கிடக்காது.
மனித உயிரும் செல்ல வேண்டிய தருணத்தில் உடளை பற்றிக்கொண்டிராமல் விட்டுச்சென்றுவிடும்.
ஒரு காரியம் நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும். இயற்கை விதியை மாற்றுவது கடினம்.
(1 vote)

