மானங் குலங் கல்வி வண்மை அறிவுடமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்!
--
ஔவையார்
பசி வந்தால் மானம், குலம், கல்வி, ஈகை, அறிவுடமை, தானம், தவம், உயர்வு, தொழில், முயற்சி, காமம்
ஆகிய பத்தும் பறந்துவிடும்!
நல்ல பசி வந்துவிட்டால் பசி முன்னே வந்து இவைகளை இரண்டாம் பட்சம் ஆக பின்னே தள்ளிவிடும்.
(5 votes)

