நடப்பது நோயற்ற நீண்ட ஆயுளைக்கொடுக்கும் மிகச்சிறந்த உடற்பயிற்சி. அவ்வாறு சிறந்த நலத்துடன் இருப்போர்களுக்கு நாடெங்கும் உள்ள நிறைய பேர்களின் நட்பும் உறவாய் கிடைக்கும். நிறைய இடங்களை சுற்றிப்பார்ப்பதால் நிறைய நண்பர்களும் அனுபவங்களும் கிடைக்கும்.

நடந்தால் என்பதற்கு "நல்ல செயல்கள் நடக்க வேண்டும்" என்றும் பொருள் கொள்ளலாம். நல்ல செயல் நடந்தால் (செய்தால்) நிறைய உறவுகளை சம்பாதிக்க முடியும். அவ்வாறானவர்களை எல்லோரும் உறவுகொண்டாடுவார்கள்.

அதே சமயம் நோயில் படுத்து விட்டால் தாழ்விற்காகக் காத்திருக்கும் பகைவர்களும் நம்மீது பாய்வதோடு மட்டுமல்லாமல் நம் உறவுகளே பகையாகி சுமையாக நினைக்க ஆரம்பித்து விடும்.

மற்றொரு விளக்கம், ஒருவர் சோம்பிப்படுத்துவிட்டாலோ, அல்லது நோயில் அதிகநாள் வீழ்ந்து விட்டாலோ அந்தப்படுக்கையே ( பாய்) அவருக்குப்பகையாகி "படுக்கை காயங்களை" ஏற்படுத்திவிடும். அது பின் முதுகுப்புறம் இரணமாய் வலியைக் கொடுக்கும்.

எனவே,
நடப்போம், நல்ல ஆரோய்க்கியத்தை அடைவோம், நல்ல செயல்களை நடக்க வைப்போம். எந்த கெட்டது நடப்பினும் நம்பிக்கையின்றி சோம்பிப்படுத்துவிட வேண்டாம், வீறுகொண்டு எழுந்து நடப்போம்

--
தமிழ் நண்பர்கள்

தொடர்புடைய கட்டுரைகள் நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை

6
Your rating: None Average: 6 (2 votes)