தண்ணீரையும் தாயையும் பழிக்காதே
பெண்மையை வணங்கும் பண்பு நம்முடையது. தாயையயும் மதித்து போற்றும் பண்பு நம்முடையது. ஆறுகளையும் இயற்கையையும் தாயாக மதித்து போற்றும் பண்பு நம்முடையது. இயற்கையை அழிக்காமல் அதனுடன் இயைந்து வாழும் பண்பு நம்முடையது.
பெற்ற தாயை பழித்தவன் உருப்படவே முடியாது. தாயை நோந்து அழ வைத்தவனை அந்த கண்ணீர் அழித்துவிடும். நமக்கு கெடுதல் செய்யாத எதையும் பழித்தால் அது பின்னால் நமக்கு கெட்ட பலன்களை கொடுக்கும் என்பது நம்பிக்கை. அதிலும் நமக்கு பெரும் பலன்களை கொடுக்கும் எதையும் பழித்து கூறக்கூடாது.
(1 vote)

