கடுக்காய்க்கு அக நஞ்சு; இஞ்சிக்கு புற நஞ்சு

இப்பழமொழி தமிழ் மருத்துவம் சார்ந்த பழமொழி ஆகும்.

கடுக்காய் என்பது மருந்துக்கு பயன்படும் காய் ஆகும். இம்மருந்து மலச்சிக்கலுக்கும் பெற்ற தாய்க்கும் அதிகமாக பயன்படும். கடுக்காயை மருந்துக்கு பயன்படுத்தும் போது அதன் வெளி தோடை மட்டும் எடுத்துவிட்டு உள்ளே இருக்கும் கொட்டையை நீக்கிவிட வேண்டும்.

இதே போலவே, இஞ்சி (சுக்கு) என்பதும் மிக அதிகமாக கைமருத்துவத்தில் பயன்படுத்தப்படும். பச்சையாக (இஞ்சியாக) இருக்கும் போது அதன் மேல் தோலை நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும்.

கடுக்காயின் உள்ளே இருக்கும் கொட்டையும் இஞ்சிக்கு மேலே இருக்கும் தோலும் நஞ்சு ஆகம். அதனால் அவற்றை மருந்துக்கு பயன்படுத்த கூடாது.

6.5
Your rating: None Average: 6.5 (2 votes)