கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்
நெருப்பானது கடுகு அளவு சிறிதானகாத இருந்தாலும் அது போரில் பட்டுவிட்டால் அதை கொளுத்தி தீக்கிரையாக்கிவிடும் அளவு வளர்ந்துவிடும்.
வைக்கோல் போன்றவற்றை ஒரு சேர கூட்டி வைத்திருப்பதை 'வைக்கோல் போர்' என்றும் போர் என்றும் அழைக்கப்படும். அதில் சிறு நெருப்பு பட்டுவிட்டாலும் காய்ந்து இருக்கும் போரானது எளிதில் தீ பற்றிவிடும்.
தீயை அணைப்பதாக இருந்தால் அதை கடுகளவும் (எள்ளளவும்) மிச்சம் வைக்காமல் அணைத்துவிட வேண்டும்.
(1 vote)

