கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி

பலன் இருந்தும் அதை அனுபவிக்க முடியாமல் இருக்கும் நிலையை காட்டும் பழமொழி இது.
பெரும் பணக்காரனாக இருந்தாலும் நல்ல சாப்பாட்டை சாப்பிட முடியாமல் நோயாளியாக இருப்போர்கள் அதிகம்.

அதே போல கடன் வாங்கியிருந்தாலும் அதை சாப்பாட்டுக்கு பயன்படுத்த முடியாமல் வேறு செலவுகள் வந்துவிட்டு பட்டினி கிடக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். கல்யாணம் செய்திருந்தாலும் ஏதோ ஒரு காரணத்தால் சந்நியாச (பிரம்மச்சாரி) வாழ்க்கை வாழ வேண்டிய சூழ்நிலை வந்துவிடலாம்.

நமக்கில்லாததை நாம் அனுபவிக்க முடியாது. ஆனால் அனுபவிக்க வேண்டிய பலனை கண்டிப்பாக அனுபவித்தே தீர வேண்டும்.

0
Your rating: None