காக்கை கறுப்பாக இருக்கும்
அன்னம் வெண்மையாக இருக்கும்

இது இயற்கையின் இயல்பு குணம்

இதைமாற்ற காக்கை குளித்தால் வெளுப்பதில்லை

அவரவர் இயல்புக்கு ஒவ்வொரு சிறப்பு உள்ளது. மற்றொரு சிறப்பு வேண்டும் என்றால் வெறும் வெளிப்பூச்சு உதவாது.
இயல்பு மாற்றப்படவேண்டும்.

நம் மனதில் பல அழுக்குகள் கெட்ட குணங்களாக உள்ளது. குளிப்பது நல்லது தான். ஆனால் குளித்தால் மனதினுள் இருக்கும் கெட்ட குணங்கள் மாறப்போவதில்லை. மனமே மாற வேண்டும். அதற்கு நல்ல எண்ணங்கள் நிறைய மனதில் உள்நுழைய வேண்டும்.
மேலோட்ட வேடம் சில காலம் மட்டுமே நிலைக்கும்.

கங்கையாகவே இருந்தாலும் மனதில் நல்ல எண்ணம் வராமல் எவ்வளவு குளித்தாலும் எந்த பலனும் இல்லை.

7.5
Your rating: None Average: 7.5 (4 votes)

கருத்துகள்

kumaran's படம்

கங்கை இப்போது இருக்கும்


6

கங்கை இப்போது இருக்கும் நிலையில்,அன்னம் வேண்டுமானால் காக்கையாக மாறலாம்.சமூகமும் அப்படித்தான் இருக்கிறது.


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


vinoth's படம்

(No subject)


Smile


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...