ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்.
பலமுடையவர்கள் தங்கள் பலத்தால் ஒரு ஏழைக்கு தீங்கு இழைக்கும் போது அவரால் எதிர்க்க முடியாமல் இயலாமையால் மனம் நோக அழ நேரிடும். அவ்வாறான மனம் நொந்து அழுத கண்ணீர் தீங்கிழைத்தவர் எப்படிப்பட்டவர் ஆயினும் அவரை அழித்து விடும்.