எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா
காஞ்சிரம் பழ விதையை எந்த இடத்தில் நட்டாலும் அது முளைத்து காஞ்சிரம் மரமாகவே வளரும். ஒருபோதும் அது தென்னை மரமாக வளராது.
இயற்கைக்கு என்று சில குணநலன்கள் இருக்கிறது. அது பெரும்பாலும் அதனதன் தேவைக்கு ஏற்பவே படைக்கப்பட்டுள்ளது. அதன் குணத்தை மாற்ற நினைப்பது பல நேரங்களிலும் முட்டாள் தனமாகவே அமையும்.
விதை எப்படி நிலத்தைப்பொறுத்து மாறிவிடாமல் விதையின் குணத்தைப்பொறுத்து வளர்கிறதோ அதே போலவே பலரது பிறவிக் குணங்களும் தாமாகவே அமைந்துவிடுகிறது. அவைகள் நீண்டகால பழக்கவழக்கங்களால் மாறலாமே ஒழிய ஒரு சில வளர்ப்பு மாற்றங்களால் மாறிவிடுவது இல்லை.
இவைஒத்த பழமொழிகள் :
கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?

