உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்

இதன் பொருள் உண்மையைச்சொன்னால் அறுந்தது பொருந்திவிடும்.

வில்லிப்புத்தூரார் எழுதிய வில்லிபாரதத்தில் ஒரு கதை வருகிறது. (வியாசர் எழுதிய மகாபாரதம் தான் மூலக்கதை. அதில் இக்கதை கிடையாது)

காட்டில் உலவும் பாஞ்சாலி ஒரு நெல்லிக்கனியை பார்த்து அதை ஆசைப்படுகிறாள். அர்ஜுனன் அதைப்பறித்துக்கொடுத்துவிட்டார்.

இதைக்கண்ட சில முனிவர்கள் ஓடோடி வந்தார்.

"ஐய்யோ, பாதகம் செய்து விட்டீர்கள், இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கனியும் கனி ஆகும். இதை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தவம் கலைந்து ஒரு முனிவர் இதை மட்டும் உண்ண வருவார். இதை அவரே தான் பறிக்க வேண்டும். வேறு ஒருவர் பறித்தாலும் இனி 12 ஆண்டுகள் உண்ணாமல் இருந்து விடுவார். இன்று அந்த நாள். இப்போது தவம் கலைந்து குளிக்கப்போயிருக்கிறார். இனி அந்த பாவம் உங்களுக்குத்தான்"

என்றார்கள்.

அர்ஜுனன் பயந்து போனான். தர்மரிடம் போனான், நீங்க தான் காப்பாத்தணும். தர்மன் யோசிக்க ஆரம்பித்து விட்டார்.

பீமன் சொன்னார். "அண்ணா எப்படியும் நாம் அழியப்போவது உறுதி. எனக்கு ஒரு ஐந்து நிமிடம் மட்டும் கால அவகாசம் கொடுங்கள். இப்போதே போய் நம்மை காட்டிற்கு அனுப்பிய துரியோதனை அழித்துவிட்டு வருகிறேன்" என்றான்

தர்மர் அவனை அமர்த்தி விட்டு கிருஷ்ணனைக்கூப்பிட்டார்.

கிருஷ்ணர் வந்து சொன்னார்.

"அவரவர் அவரவர் மனதில் வைத்திருக்கும் உண்மையை மறைக்காமல் சொன்னால் இக்கனி மறுபடியும் ஒட்டிக்கொள்ளும்" என்றார்.

ஐந்து சகோதரர்களும் தங்கள் மனதில் உள்ள உண்மைகளைச்சொல்லிவிட்டார்கள். கனி ஒட்டவில்லை.

கடைசியாக திரௌபதி முறை வந்தது.

அவள் கூறினாள்.
"ஐந்து பேர் கணவராக இருந்தும் இன்னொருவர் கணவராக இல்லையே என மனம் ஏங்கும்" என்றாள். கனி ஒட்டிவிட்டது.

அனைவரும் திகைத்துவிட்டார்கள்.

சபையில் துகிலுரியும் போது தர்மத்தை எண்ணி ஐந்துபேரும் அமைதியாகிவிட என் மனதில் என்ன இருக்கிறது என அறிந்து அதன்படி நடந்துகொள்ளும் ஒரு கணவன் கிடைக்கவில்லையே என ஏங்கும் என்பது அதன் பொருள்

6.5
Your rating: None Average: 6.5 (2 votes)

கருத்துகள்

rajudranjit's படம்

சூஷ்ச்சுமம் நிறைந்த பதில்!


4

சூஷ்ச்சுமம் நிறைந்த பதில்!