இராமன் ஆண்டா என்ன? இராவணன் ஆண்டா என்ன?

ஒரு நாட்டின் மக்களின் பார்வையில் கூறப்படும் பழமொழி இது. இதன் வெளி அர்த்தம் மக்களுக்கு தன் நாட்டை யார் ஆட்சி செய்தாலும் அதுபற்றி கவலை இல்லை என்பதாக இருந்தாலும் இராமன் , இராவணன் இருவரின் ஆட்சிச்சிறப்பையும் இது தெரிவிக்கிறது..

ஒரு அரசன் என்ற வகையில் பார்த்தால் இராமன் , இராவணன் இருவருமே நல்லாட்சியை வழங்கியவர்கள், அந்த ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடனே இருந்தார்கள் என்பதையே இராமயணம் கூறுகிறது. இராவணன் தன் ஆணவத்தாலும், காமத்தாலுமே அழிகிறான். இது இராவணனுக்கு மட்டுமல்ல எந்த அரசராக இருந்தாலும் இது பொருந்தும்.

எனவே நல்லாட்சி நடப்பதால் அந்நாட்டு மக்களுக்கு இருவரில் யார் ஆண்டாலும் கவலை இல்லை என்பதையே இப்பழமொழி காட்டுகிறது.

7.8
Your rating: None Average: 7.8 (5 votes)