admin's படம்

நமது தளத்தில் தங்களது படைப்புகள் வெளிவரவேண்டும் என நீங்கள் கருதினால் உங்களுக்காக சில உதவித்துளிகள் இதோ,

தமிழ் நண்பர்கள் தளம் வெறும் பதிவுகள் மட்டுமல்லாது நட்பு வட்டாரம் உருவாக்கவும் அனுமதிக்கிறது.

தமிழ் நண்பர்கள் தளம் முழுக்க உறுப்பினர்களாலேயே பதிவுகள் பதியும் படி செய்யப்பட்டுள்ளதால் நீங்கள் படைப்புகளை மின்னஞ்சலாக அனுப்பிவைத்து அதை சரிபார்த்து வெளியிடும் நடைமுறை நம் தளத்தில் கிடையாது.

உங்களது படைப்புகளை நீங்களாகவே நம் தளத்தில் உடனுக்குடன் வெளியிட முடியும். மாற்றங்களும் செய்துகொள்ள முடியும்.

உங்கள் படைப்புகளை முதன் முதலில் இங்குதான் வெளியிடவேண்டும் என்றோ அல்லது வேறு எந்த தளத்திலும் இதுவரை வராததாக இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடோ நம் தளத்தில் கிடையாது.

உங்களது சொந்த படைப்புகள் எத்தனை நாட்களுக்கு முன் படைக்கப்பட்டதாக இருப்பினும் அதை இங்கு வெளியிட உங்களுக்கு உரிமை உள்ளது. சொந்த படைப்பை நீங்கள் வெளியிடமுடியும்.

தயவு செய்து உங்கள் சொந்த படைப்புகளை மட்டும் இவ்வாறு பதியவும். மற்றவர்கள் படைப்பை பதிவது தளவிதிமுறைகளுக்கு எதிரானது.
அவ்வாறு போட வேண்டி கட்டாயத்தில் பதிவின் நிஜ படைப்பாளரின் அனுமதி பெற்று, அப்பதிவை உரையாடல்/விவாத மன்றம் (Forum) பகுதியிலோ அல்லது வலைப்பதிவாகவோ பதியலாம், ஆனால் கண்டிப்பாக நிஜ எழுத்தாளரின் பெயர், இணைய முகவரி போன்றவற்றை பதிவில் குறிப்பிட்டு அவருக்கான மரியாதையை கொடுக்க வேண்டும்..

வழிமுறை:

முதலில் தளத்தில் ஒரு பயனர் கணக்கு உருவாக்கி தளத்தினுள் நுழையவும்.

தளத்தில் நுழைந்த பின் தளத்தின் மேல் பகுதிலில் "புதிய பதிவை இணை" என்பதிலிருந்து கவிதை, கட்டுரை போன்ற உங்களது படைப்பின் வகையை தெரிவு செய்யவும்.

அதில் வரும் பக்கத்தில் படைப்பின் விபரங்களை கொடுத்து சேமித்துக்கொள்ள முடியும்,

இவ்வாறு சேமிக்கப்பட்ட பதிவை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றிமைக்கவோ அல்லது திருத்தவோ அனுமதி உண்டு. அதை செய்ய அந்த படைப்பின் தலைப்பின் பக்கத்தில் இருக்கும் "மாற்று" என்பதை தெரிவு செய்து மாற்றிக்கொள்ளலாம்.

படைப்புகளை தவறாக பதிந்து அதை அழிக்கவோ அல்லது மேலும் உதவிக்களுக்கோ http://tamilnanbargal.com/contact இங்கே சென்று தொடர்பு கொள்ளலாம்.

படைப்பின் வகையை சரியாக தெரிவுசெய்து வெளியிடவும். உதாரணமாக SMS சிரிப்புகளை கவிதை பக்கத்தில் பதிய வேண்டாம்.

தானாகவே உங்கள் வலைப்பூவில் இருந்து பதிவுகளை நம் தளத்தில் இணைக்க http://tamilnanbargal.com/node/291 இங்கே பார்க்கவும்

தங்கள் வலை முகவரி, இணையதள முகவரி போன்றவைகளை தங்கள் கையெழுத்தாக வைக்கவும், அதையே தங்கள் பதிவுகளின் கீழ் போட்டுக்கொள்ளவும் அனுமதி உண்டு. ஆனால் அதை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் அதிக முறை போடுவது ஸ்பேம் எனக்கொள்ளப்படும்.

சில நேரம் உங்கள் வலைதளத்தின் ஒரு பதிவின் முகவரியை மட்டும் இத்தளத்தின் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால் அதை Wall Post ஆக மட்டும் போட்டுவிட வேண்டுகிறோம். இதைச் சாதாரண பதிவாக பதிய அனுமதி இல்லை.

அனைத்து பதிவுகளும் நம் தளத்தின் விதிமுறைகள் http://tamilnanbargal.com/node/45 க்கு உட்பட்டது

சிறப்பு பதிவுகளை அல்லது தளத்தில் இதுவரை வகைபடுத்தப்படாத வகையான பதிவுகளை பதிய விரும்பினால் தயவு செய்து அதன் முழுவிபரங்களை http://tamilnanbargal.com/contact இங்கே சென்று அனுப்பி வைக்கவும்.

இத்தளம் தமிழிற்காகவும் நண்பர்களுக்காகவும் இலவசமாக செயல்படுவதால் தங்கள் படைப்பிற்கு தற்போது வெகுமதிகள் வழங்கப்படமாட்டாது.

தளத்தில் வரும் விளம்பரங்கள் தளம் தொடர்ந்து செயல்பட மட்டும் பயன்படுத்தப்படும்.

நன்றி
தமிழ் நண்பர்கள்

9.125
Average: 9.1 (8 votes)
Your rating: None Average: 9.1 (8 votes)

கருத்துகள்

100002054506651@facebook_2's படம்

good


10

Clap good

selvakumaar's படம்

மிகவும் நன்றி.


10

மிகவும் நன்றி.


அன்புடன் நான் செல்வகுமார் தமிழ்மீதும்,தமிழர்கள் மீதும் ஆழ்ந்த நட்பும் அன்பும் கொண்டவன்.உங்ளுடன் உறவாடுவதில் மகிழ்ச்சியுடையவன்