குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி

தமிழ்
ஜனவரி 10, 2009 02:16 முப
குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் மீதி குல வித்தை என்பது ஒரு வீட்டில் முன்னோர்களால் காலங்காலமாய் செய்துவரும் கலையை குறிக்கும். ஒருவருக்கு இந்த வித்தையானது தன் தந்தை, தாய் மரபணு (ஜீன்) வழி தானாகவே கிடைத்திருக்கும். அதனால் அதை கல்லாமலேயே பலவும் தெரிந்திருக்கும். அல்லது கொஞ்சம் கற்றாலே அவ்வித்தையை எளிதில் அறிந்து கொண்டு கைவந்த கலையாக மாறி விடும். எனவே மரபணு வழியாக பாதி கலையும், கற்பதால் பாதி கலையும் அவருக்கு தெரியவரும். தொடர்புடைய பழமொழி: மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுக்கொடுக்க வேண்டுமா?