உங்கள் முகம் பார்த்ததில்லை! !

மல்லி...
செப்டம்பர் 02, 2020 07:19 பிப
 
உங்கள் முகம் பார்த்ததில்லை ஒருநாளும்!

 உங்கள் குரல் கேட்டதில்லை ஆனாலும்!

 காதல் மட்டும் குறையவில்லை எந்நாளும்..!

அழகெல்லாம் அணிவகுத்து வந்தாலும் 
அண்ணல் நபி முன் அசராமல் போகுமா..?

எத்தனை கோடி செல்வம் இருந்தாலும்..
கருணை நபியின் காலணிக்கு ஈடாகுமா...?


விண்ணில் உயர்ந்தது நிலா ...
உங்கள் அழைப்பை ஏற்று தன்னை வெட்டிக் கொண்டதால்! .

மண்ணில் உயர்ந்தது மதினா ...
உங்கள் பூவுடலைத் தன்னோடு கட்டிக்கொண்டதால்!.

பாலைவனம் சோலையானது உம் வரவால் ...

இந்த ஏழை மனம் ஏங்கித் தவிக்கிறது உம் பிரிவால்... 

இல்லை என்ற சொல்லும் இருந்ததில்லை ....

தொல்லை தந்த யாரையும் பழித்ததில்லை ...

பாலைவனத்து பௌர்ணமியாய் உங்கள் முகம் ..!

விரோதியும் விரும்பிடுவார் விண்ணுயர்ந்த உங்கள் குணம்..!