நான்

பாக்யா மணிவண்ணன்
ஆகஸ்ட் 22, 2020 10:01 பிப
மலர்களை கூட ரசிக்க தெரியாதவள் நான்... கவிதை எழுத வைத்து விட்டார்கள் என்னை.. ஜன்னலோரப்பேருந்தில் வேடிக்கைப் பார்க்கும் பயணியாய் சலசலப்புகளுடன் எப்போதும் பயணிக்கிறது மனது!! தேடித் தொலைகிற‌ வாழ்க்கையில் தொலைத்ததையும் தேடுகிறேன்.!தேடலில் எதுவும் கிடைக்கவில்லை.
கிடைத்தது எதிலும் திருப்தியில்லை
இடறி விழுந்த இடங்களிலெல்லாம்
இழந்ததே அதிகம். இன்றளவும் என் ஜன்னல்வெளியில்சலசலப்புகளைத்தாண்டி ஒரு நட்சத்திரத்தைக் கூட என்னால் ரசிக்க முடிந்ததில்லை. நான் யாரென்று இனியும் என்னிடம் கேட்காதீர்கள். ஒற்றை வார்த்தையில் நான் உங்களுக்கான பதிலானவள் அல்ல...! என்றோ நீங்கள் பேசிய
ஏளனச்சொல்லின் எதிரொலிகள்
இன்றளவும் என்னை எரித்துக் கொண்டிருக்கலாம். இயல்பாய் வந்து புன்னகைத்தால் பழையன மறவெனோ! முகநட்பு பாராட்டி
முதுகில் குத்தியவர்களை..  நான்
முன்புபோலில்லை. என் முகத்தில் மட்டுமல்ல முதுகிலும் புதிதாய்
முளைத்துவிட்டன கண்கள்... ஆனாலும் நெஞ்சு நிமிர்த்தியே
நிற்கிறேன் நாளும்...! இதுவும் கடந்து போகுமென என்றோ படித்தது நினைவில் வர எதுவும் மறந்துபோகாது என்பது என் மனதுள் ஒலித்தது அவர்களை காண்கையில் ...
             ✍🏻 பாக்யா மணிவண்ணன்.