சோகப் பாடல்

ஆர் எஸ் கலா
ஆகஸ்ட் 11, 2020 08:08 பிப
#இது #ஓர் #அழகிய #காதல் #சோகப்பாடல் 
#ஆண் #குரலில் #ஒலிப்பவை #நான் #வார்த்தைகளை #மாற்றி #அமைத்துள்ளேன் #என்ன? 
#பாடல் #கண்டு #பிடியுங்கள் 😊

பொன்னையா
பொன்னையா 
உன்னை நினைச்சு 
இருந்தேன் பொன்னையா. 
உன்ன பார்க்காம பார்க்காம 
நீர் வடிக்கிறது கண் அய்யா  (பொன்னையா)

கண் இமையும் வெட்ட வெட்ட
அன்னை அவள் திட்டத் திட்ட 
கண் இமையும் வெட்ட வெட்ட
அன்னை அவள் திட்டத் திட்ட 
நான் பார்த்திருந்தேன் விடி
வெள்ளி தோணலை.....யே
பாதையை நோக்கி இருந்தேன் 
தேவன் நீ வரவில்லை....யே / (பொன்)

பாறையில கால் அடிச்சு 
விரலுக்கும் தான் வலிக்கலையே
ஓடைத்தண்ணீர் கூட எடுத்து
ஒரு முடர் தான் குடிக்கலையே 
கொவ்வைப் பழம் போல் 
கண் இரண்டும் நிறம் மாறி போனதையா  உன்னாலே என் மனசும் இப்போது
விரதம்  இருந்து தவிக்குதையா 
விழி ஊற்றிய நீர் மண்ணுக்குள் 
முத்தாகப் போனதையா 
நித்தம் நித்தம் உன் எண்ணம் 
நிழலாக தொடருதையா (பொன்னையா)
 

நடுக்கடலில் படகு போல 
ஏங்குதையா என் நெஞ்சம்
இருள் சூழ்ந்த என் வாழ்வை
நெருங்கிடுமோ ஓர் வெளிச்சம்.
நீரிலே கொழுத்தி போட்ட மெழுகாக 
மாறிப் போச்சு  எனது காதல் கத
குளத்து மீன் போல போச்சு ஏ...ன் வாழ்வு 

உறைபனியாய் 
போனதையா என் குருதி.
உதட்டோரம் கொடுத்து 
விடையா அன்பு முத்தம் 
நான் என்றென்றும் போடும் 
சத்தங்கள் விழவில்லையா
உன் காதில் மட்டும்.

பொன்னையா பொன்னையா
உன்னை நினைச்சி இருந்தேன் பொன்னையா.
உன்னை பார்க்காம பார்க்காம. நீர் வடிக்கிறது என் கண் அய்யா 
கண் இமையும் வெட்ட வெட்ட
அன்னை அவள் திட்டத் திட்ட
நான் பார்த்திருந்தேன் விடி
வெள்ளி தோணலையே......யே
பொன்னையா பொன்னையா உன்னை நினைச்சி இருந்தேன் பொன்னையா.....யா