எண்ணத்தால்

ஆர் எஸ் கலா
ஜூலை 12, 2020 01:21 பிப
எண்ணத்தால் இணைந்தோம் 
வண்ணத்தாள் வழியே பல 
காதல் கடிதம் வரைந்தோம் .

ஏதேதோ கதைகள் பேசியே 
உள்ளத்தையிடம் மாற்றினோம்
உணர்வலையால் வேலியிட்டோம்.

உணர்ச்சிகளை நாளும் பொழுதும் 
தொலைபேசியின் வழியே பரிமாறியுண்டோம்.

இறுதிவரை போராடி உறுதியோடு
இருகரம் கோர்த்தோம்.
நீயுள்ளவரை உயிர் வாழ்வேன்
உன் மூச்சோடு  என்  மூச்சையிணைத்தபடி.