கனவும் கை கூடவில்லையே

ஆர் எஸ் கலா
ஜூலை 07, 2020 10:58 முப
காதல் என்னும்  கனவுலகில் 
அந்தக் காதலன் ஒருத்தியோடு ஆடினான்.
கண்ணோரம் வெட்கம் கொண்டேன் 
நெஞ்சோரம் ஏக்கம்  கொண்டேன் 
நான் நெஞ்சோரம் ஏக்கம்  கொண்டேன்.

காதல் என்னும்  அந்த வானிலே 
உனைத் தேடினேன் நான் கனவிலும் 
உனைத் தேடினேன் காணாது வாடினேன்
கனவு கலைந்தும் நான் வாடினேன்.

புது மேடையிட்டு மண மாலை போட்டு 
அந்தப் பெண் அவனோடு அமர்ந்து
இருந்தாள் அவனோடு அமர்ந்திருந்தாள்.

எதிர் பார்ப்பை தூது விட்டு 
பெருமூச்சை இறைத்த படி 
காத்திருந்தேன் உனக்காகக்
காத்திருந்தேன்.

அவள் தனிமையில் இல்லை துணையோடு
அமர்ந்திருந்தாள் மகிழ்வாக 
நான் தனிமையிலே தவிப்போடு 
சோர்ந்திருந்தேன் 
கனவுலகிலும் என்னை ஏங்க விட்டவனே நீீ எங்கே.