உள்ளொன்று புறமொன்று

ஆர் எஸ் கலா
ஜூலை 07, 2020 10:08 முப


உள்ளொன்று புறம் ஒன்று 
உரைக்கும் குணம்.
மனிதனிடத்தில் மட்டுமே உண்டு.
உண்மைக்கு புறம்பாய் நடக்கும் 
எண்ணமும் அவனிடத்தில் தான் உண்டு.

அறிவாளி போல் நடிப்பான்  
நின்று கொண்டு.
ஆனால் அவன் வாழ்வை
புரட்டிப் பார்த்தால் ஆலம் பழம்
போல் அசிங்கம் தான் உண்டு.

 இளித்து இளித்துப் பேசுவான் 
இனிப்பாகவே வந்து விழும்
காதில் கொண்டு.
பின் உன்னைப் பற்றியே
புரளியைக் கிளப்புவான்
தள்ளி போய்க் கொண்டு.

 நாவிலே வேம்பை வளர்ப்பான் .
சொல்லிலே கரும்பைக் கலப்பான் உள்ளத்துக்குள்ளே கரிச்சித்துக் கொண்டு.
 உதட்டிலே தேன் தடவிய பூவாக 
புன்னகை புரிவான் உன்னைக் கண்டு. 

 உள்ளத்தால் கெட்டுப் போவதை 
விட
உடலால் கெட்டுப் போவோருக்கு 
பெயர் வேசி என்றால் 
உள்ளொன்று புறம் ஒன்று பேசி
உள்ளத்தால் கெட்டோருக்கு
என்ன பெயர்  வைக்க வேண்டும் என்று கூறடா விவாதம்  
அமைத்து வலம் வரும்  மண்டு.