தூதூ போ செல்லக் கிளியே

ஆர் எஸ் கலா
ஜூன் 29, 2020 08:20 பிப


நீ முந்தானாத்துப் பார்த்தாயா..?
என் மச்சான் வந்தாராம்
பச்சைக் கிளியே அவர் ஓரக்
கண் பார்வையை நீ மெச்சு 
கிளியே.../


ஓடை நீரில் நானொருத்தி
ஓயாமல் காத்திருக்கும்
செம்பரத்தி அதை நீ சென்று
சொல்லி  விடு அவரைத்  தனியே
நிறுத்தி,,,/


அவர் என் காதில் கிசு..கிசுத்த
கதையைக் கேட்டு என் தொலை
பேசியும் வெட்கம் கொண்ட 
கதைதனை கவி வரிகளிலே 
கூறிவிடு செல்லக்கிளியே ...../


ஓடை நீரும் சலசலக்க
வாடைக் காற்றும் குளுகுளுக்க  
வசந்த முல்லை  வாசமோ என்னை மயக்க குயில் ஓசையும்  காதல் கீதம் போல் 
என் காதில் ஒலிக் பேதை  என் நெஞ்சம் அவர்  மார்பின் மஞ்சம் தேடுதடி தனியே
தோழியாய் நீயும் தூது போ தூது போ 
என் செல்லக் கிளியே ..../