பூ! மீது பூ! வசிக்கும் பிரபஞ்சம்

தேன்மொழியன்
ஜூன் 29, 2020 08:15 பிப
*பூ! மீது பூ! வசிக்கும் பிரபஞ்சம்*

உன் விரலும் என் விரலும் ஒன்று சேரும் போது உண்டாகும் வெப்பத்தை நெஞ்சம் தாங்கிடாது

உன் குழலில் என் விரலை கொண்டு சேர்த்த போது உருவான சத்தங்கள் என்றும் ஓய்ந்திடாது

 பருவத்தின் மாற்றங்கள் நடை போடும் வான் மீது ஒளிவீசும் பல நூறு மின்னல்கள்

என் வீட்டு கதவுகளை மூடி  வைத்த போதுமங்கு  உன் மூச்சுக் காற்றடித்து திறந்து விடும் ஜன்னல்கள்

 கனவினிலே கண்ட முகம் காலையிலே கண்டு விட ஓடி வந்தேன் பல நீள மையில் தூரம்

கால் கடுக்க காத்திருந்து உன் வருகை முடிந்த பின்பு ஒடி வந்து நின்றேன் உன் சுவடோரம்

 வெட்கத்தின் சிகப்புகளை சேமித்து வைத்து தினம் புது வண்ணம் தீட்டிவிட பேராவல்

சின்னதொரு சிரிப்புதிர போதுமங்கு எனைத்தொலைத்து மீண்டுமங்கு தொடங்கி விடும் என் தேடல்

 கூந்தலிலே மஞ்சமிடும் பூக்களுக்கு தெரிந்திருக்கும் பூ மீது பூ வசிக்கும் பிரபஞ்சம்

கூந்தலினைக் கோதுகின்ற என் விரலின் இடுக்குகளில் வசந்தங்கள் தோன்றி தினம் உனை கொஞ்சும்

 மலர்ந்து விட்ட முகம் கண்டே துளித்துளியாய் நொடிநொடியாய் வளர்ந்து வரும் என் இன்பம் நீ! அறிவாயோ!

இழந்து விட்ட பொழுதுகளை இரு மடங்காய் சேர்த்தெடுத்து என் வாசல் தேடி வந்து நீ! தருவாயோ!

கவியன்புடன்
தேன்மொழியன்
பெங்களூர்
9900458494