புரட்சிப் பெண்கள்

கே.வி. விமலாதேவி
ஜூன் 14, 2020 09:36 பிப
புவியில் பெண்ணாய் பிறந்திட்டோம்
அமைதி கொண்டே வளர்ந்திட்டோம்
புதுமைப் பெண்ணாய் நடையிட்டோம்
புரட்சிகள் செய்தே உயர்ந்திட்டோம்
அடுக்கலை பணிகள் கொடுத்தாலும்
அணைத்து துறையிலும் சாதித்தோம்
எதிலும் பெண்கள் நிலையென்றே
உறுதியோடு யிங்கு உணர்த்திட்டோம்
குடும்பம் நலம்பெற நாள்தோறும்
தியாகம் செய்வோம் சலிப்பில்லை
வேராய் மறைநது உயர்வளித்து
விண்வெளி செல்வோம் வியப்பில்லை
எத்தனை சங்கடம் வந்தாலும்
இயல்பாய் ஏற்று அதைவெல்வோம்
முத்தென உறவுகள் ஒன்றிணைய
முயன்று நாளும் அதில்வெல்வோம்
எத்தனை பதவிகள் வகித்தாலும்
பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம்
பெண்ணாய் பிறந்ததை தினமெண்ணி
பெருமிதம் கொண்டே வாழ்ந்திடுவோம்
அவதா ரங்கள் பலயெடுத்தே 
அனைத்து பணிகளும் செய்திடுவோம்
பகையைப் பேசி வருவோர்க்கும்
பாசம பூழை பொழிந்திடுவோம்
அங்கத்திற்கு பங்க மெனில்
அரிவாள்ளெடுக்கவும் துணிந்திடுவோம்