நினைவெல்லாம் நீதானே

ஆர் எஸ் கலா
May 29, 2020 07:42 பிப


ஓடும் குருதியிலே குளிப்பதும் 
நீதானே/
உள்ளக் குழியில் இருப்பதும் 
நீதானே/

மூச்சோடு சேர்ந்து சுழல்வதும்
நீதானே /
பேச்சோடு இணைந்து இனிப்பதும் நீதானே/

துள்ளும் எண்ணத்தின் வெள்ளமும் நீதானே/
துடிக்கும் இதயத்தின் ஓசையும்
நீதானே/

வளர்ந்திடும் கற்பனையை வளமாக்குவதும் நீதானே/
வாழ்க்கை கொடுத்திடும் தெய்வமும் நீதானே/

உறக்கத்தில் உளறச் செய்வதும் 
நீதானே/
உணர்ச்சியைத் தூண்டிச் செல்வதும் 
நீதானே/

காதல் காமம் இரண்டிலும் 
நீதானே/
உயிரிலே கலந்திட்ட நினைவெல்லாம்
நீதானே/