உத்தரவின்றி உள்ளே வா

ஆர் எஸ் கலா
May 28, 2020 03:11 பிப

நோக்கும் விழி வழியே 
வந்திடலாம்/
பேசிடும் மொழியோடும் நீ 
கலந்திடலாம்/
அடி நெஞ்சத்திலே தயங்காது  குடியேறிடலாம் /
ஆனந்த ராகம் இன்றே பாடிடலாம் /
உல்லாச வாழ்வை எந்நாளும்
கண்டிடலாம்/

அன்பே என்னில் உன்னை
இணைத்திடுவேன்/
உயிரினில் பெயரை முத்திரை 
குத்திடுவேன்/
பருவ பானமதை பகிர்ந்து 
கொடுத்திடுவேன்/
முதுமையிலும் துணையாய்த் தோள் சாய்த்திடுவேன் /
முள்ளானாலும் உன் பாதையிலே பயணித்திடுவேன்/

வெட்கத்தை வீசி விட்டு 
வா/
காதல் வலையை விரித்து 
வா /
உறவாடிட. நீயும் ஓடி 
வா/
உள்ளமதை திறந்தேன் விரைந்து
வா/
கயவனே உத்தரவின்றி உள்ளே  
வா/