பெண்ணொருத்தி

ஆர் எஸ் கலா
May 28, 2020 01:19 பிப


என்னை மனதில் நிறுத்திய 
பெண்ணொருத்தி/
கண்ணை உறுத்தும் தூக்கம்
துரத்தி/
காதலை தனக்குள்ளே தொலையாது
பத்திரப்படுத்தி/
உண்ணாமல் தன்னை தினமும் 
வருத்தி/
உள்ளம் பின்னிடும் ஆசைகளோடு 
காத்திருக்காள்/

வளைந்தோடும் நதிக்கரையிலும் 
வளையாத மலையுச்சியிலும்/
பூவரசம் மரநிழலிலும் பாதரசப்
பாட்டிலும்/
துள்ளும் அருவியிலும் துவட்டும் மழையிலும்/
வாட்டும் வெயிலிலும் வதைக்கும் பனியிலும்/
தன்னோடு கற்பனையில் என்னையும் சேர்த்திழுக்காள் /

காற்றில் சிக்கிய வாழையிலையின் கதையாக/
காதல் கொண்ட குமரியின் 
நிலையானது/
இதயச் சிம்மாசனத்தில் காதலனை அமர்த்தி/
தேடி வரும் வரணையெல்லாம் மறுப்போடு துரத்தி/
பெற்றோரின் வெறுப்பில் வேகுகின்றாள் ஒருத்தி/