தோழி

தமிழ்
May 01, 2020 11:16 பிப
கவிதையில் அடக்கமுடியா
கவிதை நீ
நிறங்களில் நிறையா
நிறம் உனது
குணங்களில் நீ
மட்டும் வேறுபட்டவள்
சிறுகுறை சொல்ல
தெரியாத சிறுமியே
வயதானாலும் நட்பில் நாம்
பால்யத்திலே வாழ்கிறோம்
காமமில்லா நட்புக்கு
நாம் இலக்கணமானோம்
இலக்கணபிழை நமக்கில்லையடி
சிறு சண்டையோ பெரும் போரோ
நம் நட்புக்கு 
நாமே வெள்ளைக்கொடியேந்துவோம்