தோழி

தமிழ்
May 01, 2020 11:07 பிப
தோழியே
காமம் கலைத்த கள்ளியே
 
கைபிடித்து கோர்வை எழுத்து
கற்றுத்தந்த ஆசானே
கருவண்டு கண்ணழிகியே

பூங்கரங்கொண்டு 
சிறு குழந்தையாய் எனை
மிதிவண்டி பயிற்றுவித்தாயே
என் சகோதிரியாய்

இடைபட்ட பதின்ம வயதில்
எனை மறந்த பிடாரியே
தடம் மாறி கல்வியில்
தடுமாறி கரையேறினேன்-நீயின்றி

அதிகாலை பேருந்தின் 
பயணத்தின் இருக்கையின்
நடுவில் 
பிறர் கண் உன் மீது
மேயும் போது
கனல் பாயும் விழியால்
உனை அணைக்கும் 
தாய்மையடி

 
 
வருடங்கள் கடந்தும்... வயது வளர்ந்தும் ...
 
இன்னும் சண்டையிடும்
உன் நட்பில்
சிறு பிள்ளையாய் உன்
தோள் சாய்கிறேன் - விழி மூட