பாவி

பவித்ரன்
மார்ச் 23, 2020 06:18 பிப
நெதமும் சொம்பு தண்ணி குடிச்சும் என் தாகம் தணியல.
தெனமும் உன்ன சைட் அடிச்சும் என ஆச அடங்கல.
பொறந்து இருபது வருஷம் ஆச்சு என் வாழ்க்கையும் தொடங்கல.
வாழ்க்கையா உன்ன நெனச்சேன் திமிர்க்காரி நீயும் மடங்கல.

எவளுக்கும் சிக்காத ஆம்பளதான் நானு - உன்கிட்ட
மாட்டிகிட்ட தூண்டிமுள்ளு மீனு.
சிங்கத்தையே ஆசபட வெக்கும் அழகான மானு - நீ
அம்ப விட்டு என்ன கொல்லும் வில்லோட நாணு.

மசமசன்னு வளர்ந்த நீயும் கம்பங்கொல்ல - காஞ்சமாடு
என்ன காக்க வெச்சு நாளும் கொல்ல.
தூக்குவேண்டி நானும் இளவட்டக்கல்ல - என்ன
கட்டிக்கிறேன்னு நீயும் ஒரு வார்த்த சொல்ல.

நாலு வருஷத்த எழந்தேன் நானும் பாவி - இந்த ரெண்டு
வருஷத்துக்கே ஏங்குது என்னொட ஆவி.
உன் மனச தொறக்க என்கிட்ட இல்ல சாவி - என் மனசயும்
உனக்குள்ள வெச்சு பூட்டிக்கோயேன்டி பாவி.