நோய்க்கு அஞ்சுவதா?

கா.உயிரழகன்
மார்ச் 18, 2020 05:13 பிப
நோய்வரத் தான்இடம் தான்கொடுத் தால்நீயோ
நோய்வந்து நொந்துசாவாய் நன்று.
 
நோய்வரும் வேளை மருந்தைப் பருகினால்
நோய்போய் நலமாய்ப் பிழை.
 
நோய்கள் வருவதும் போவதும்
வாழ்வில் வழமைதான் பாருங்கோ...
வந்தநோய் உடலில் நிலைப்பது
அழுக்கான நம்முடல் நிலையாலே...
வந்தநோய் உடலிற்குள் நுழையாமை
நம்முடல் சுத்தம்தான் விரட்ட
நாமுட்கொள்ளும் மருந்தே காவல்!
 
* 'பிழை' என்றால் 'வாழ்' என்று பொருள். மேலிரண்டும் ஒரு விகற்பக் குறள் வெண்பா. கீழேழு வரியும் என் விளக்கம்.